அதிராம்பட்டினம், திலகர் தெரு, ஈசிஆர் பிஸ்மி மெடிக்கல்ஸ் அருகில், தீன் டயக்னாஸ்டிக் சென்டர் கட்டிடத்தில், புதியதோர் உதயமாக 'ஷோபா' பல் மருத்துவமனை இன்று (18-10-2020) ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
நிகழ்வுக்கு, பட்டுக்கோட்டை கணகேசதேவர் நினைவு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, மருத்துவமனையை திறந்து வைத்தார்.
அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை பல் பொதுநல மருத்துவர் மற்றும் பல் வேர் சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.பாரதி, மகிழங்கோட்டை ஜி. பாலசுப்பிரமணியன், வி.சுப்ரமணியன், விஜய் மக்கள் இயக்கம் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆதி.ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், உறவினர்கள், நண்பர்கள், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஷோபா மருத்துவமனை பல் மருத்துவர் டாக்டர் பிரியங்கா பாரதி அனைவரையும் வரவேற்று, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தாம் அளிக்க இருக்கும் அதிநவீன பல் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை குறித்து கூறியது;
பல் பொதுமருத்துவம், முகத்தாடை அழகு சீரமைப்பு சிகிச்சை, பல்வேர் சிகிச்சை, லேசர் சிகிச்சை உள்பட பல் மருத்துவம் தொடர்பான அதிநவீன கருவிகள் மூலம் பல்வேறு சிகிச்சை அளிக்கப்படும்.
தினமும் காலை 9.30 மணி தொடங்கி மதியம் 1.30 மணி வரை... மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவ சிகிச்சை, ஆலோசனை வழங்கப்படும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
பல் மருத்துவம் தொடர்பான சேவையை அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதி பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.
பல் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை
முன்பதிவு தொடர்புக்கு...
9787117949
Congratulations.
ReplyDeleteஷிஃபா மருத்துவமனை மாதிரி இல்லாமல் இருந்தால் சரிதான்
ReplyDeleteஷிஃபா சரி இல்லாததால்,
ReplyDeleteசோபா உருவானதோ?!