அதிராம்பட்டினம் ஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்றம் தொடக்கம், புதிய நிர்வாகிகள் தேர்வு, புதிய அலுவலகம் திறப்பு விழா மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வினை, ஹாபிழ் எம்.எஸ் முகமது முஸ்தபா கிராத் ஓதி தொடங்கி வைத்தார். நிகழ்வுக்கு, ஜமாத் துணைத்தலைவர் ஆர்.ஹசன் அலியார் தலைமை வகித்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளர் மவ்லவி முகமது இத்ரீஸ் சிறப்புரை வழங்கினார்.
நிகழ்வில், ஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், தலைவராக டி.அல் அமீன், செயலாளராக ஏ.நாவித் அகமது, துணைச்செயலாளராக ஏ.வாசிம்கான், பொருளாளராக பி.முகமது அசாருதீன், துணைப்பொருளாளராக எஸ்.அப்துல் பாசித், மருத்துவ அணி பொறுப்பாளராக எஸ். சைத் இப்ராஹீம் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில், ஆதம் நகர் ஜமாத்தார்கள், இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Congratulations
ReplyDelete