.

Pages

Wednesday, October 14, 2020

தஞ்சை மாவட்ட வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பணி: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு!

அதிரை நியூஸ்: அக்.14
தஞ்சை மாவட்ட வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பணி நடைபெறுதல் தொடர்பான அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்து கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (14-10-2020) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது:
2021 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய 2287 வாக்குச்சாவடிகளும் துணை ஆட்சியர் நிலை அலுவலர்களால் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நகர்புறம்-கிராமபுறத்தில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, இரண்டு வாக்குச்சாவடிகளாக பிரிக்கப்படவுள்ளது. வாக்காளர்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து 2 கி.மீ க்கு மேல் தொலைவில் அமையப்பெற்ற  வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளர் வாக்களிக்கச் செல்லும் பொதுப் பாதையில் இயற்கை குறுக்கீடுகளான ஆறு, குளம், ஏரி ஏதேனும் இருப்பின் தொடர்புடைய வாக்காளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அவ்வகையான வாக்குச்சாவடிகள் இரண்டாக பிரித்திட இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி, 172, பாபநாசம் சட்டமன்ற தொகுதி. 173, திருவையாறு சட்டமன்ற தொகுதி. 176, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளிலிருந்து தலா ஒரு விண்ணப்பங்கள் வரப்பெற்று பரிசீலனையில் உள்ளன. தொடர்புடைய வாக்குப்பதிவு அலுவலாpன் பாpந்துரைப்படி வாக்குச் சாவடிகள் இரண்டாக பிரித்து முறைபடுத்திட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி கடந்த 10-08-2020 முதல் தொடங்கி எதிர்வரும் 31-10-2020 வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பான வாக்குப்பதிவு அலுவலர்-உதவி வாக்குப்பதிவு அலுவலர் நிலையிலான அனைத்து கட்சி கூட்டம் அந்தந்த தொகுதிகளுக்குட்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் கோhpக்கை மனுக்கள் வழங்கிட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளிடம் கோரப்பட்டுள்ளது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளபடி உரிய திருத்தங்களுடன் திருந்திய மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

14-12-2020 முதல் 13-10-2020 வரை வரப்பெற்ற மொத்த மனுக்களின் எண்ணிக்கை 16,916, அதில் ஏற்கப்பட்டது 13,211, நிராகரிப்பட்டது 2804, வாக்காளர் பெயர் நீக்கம் (படிவம் 7) செய்வதற்கு பெறப்பட்ட படிவங்கள் 6286, இதில். ஏற்கப்பட்டது 5868, நிராகரிப்பட்டது 200 மேலும், புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க (படிவம் 6) பெறப்பட்ட படிவங்கள் 5554, இதில் ஏற்கப்பட்டது 4286, நிராகரிப்பட்டது 895,

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 14-02-2020 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்கள் 20,07,921 உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை 9,80,880 மொத்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10,26,914, மூன்றாம் பாலினத்தவர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 127 என வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளது. தற்போது, 13-10-2020 வரை நேரிடையாகவும் மற்றும் இணையத்தின் மூலமாக பெறப்பட்ட ( www.nvsp.com and www.elections.tn.gov.in ) மனுக்களின் அடிப்படையில் மொத்த வாக்காளர்கள் 20,06,380 உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை 9,80,062, மொத்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 10,26,188, மூன்றாம் பாலினத்தவர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 130 என வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ம,கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார். 

இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் பாலச்சந்தர், தேர்தல் வட்டாட்சியர் சந்தனவேல். அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.