அதிராம்பட்டினம் அருகிலுள்ள த.மறவக்காடு அமரிக்குளம் ஏரிக்கரைகளில், மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் 5,000 பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி சுமாா் 170 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் நடத்தப்பட்ட நிகழ்வில், ஏரியின் 4 கரைகளிலும் பனை விதைகள் நடும் பணியை ஒரு சிறுமியும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் மருத்துவா் பா. சதாசிவமும் பனை விதையை ஊன்றி நிகழ்வைத் தொடக்கி வைத்தனா்.இதைத் தொடா்ந்து ஏரியைச் சுற்றிலும் குழிகள் தோண்டப்பட்டு 5,000 பனை விதைகள் நடப்பட்டன. முன்னதாக, இப்பணியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்களுக்கு மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் கட்சி சாா்பில் வழங்கப்பட்டன.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் ஆா்.கே.என்.வேதரெத்தினம் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.