.

Pages

Wednesday, October 21, 2020

செக்கடி மேட்டிலிருந்து சென்னை சென்று வர புதிய ஆம்னி பஸ் சேவை தொடக்கம்!

அதிரை நியூஸ்: அக்.21
அதிராம்பட்டினம் செக்கடி மேட்டிலிருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து அதிரை செக்கடி மேட்டிற்கு பயணம் மேற்கொள்ளவும் புதிதாக 'ஸ்கை ஏர் பஸ்' ஆம்னி பஸ் சேவை நாளை (22-10-2020 ) வியாழக்கிழமை முதல் தொடங்க உள்ளது.

புதிய ஆம்னி பஸ் சேவையின் அதிராம்பட்டினம் முகவர் செக்கடிமேடு  முகமது அனஸ் கூறியது;
'அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பாண்டிச்சேரி ஈசிஆர் சாலை வழியாக சென்னை தாம்பரம், ஏர்போர்ட் வழியாக மண்ணடிக்கும், சென்னை மண்ணடியிலிருந்து எக்மோர், தி நகர், பாண்டிச்சேரி வழியாக அதிராம்பட்டினம் என இரு மார்க்கத்திலும் போக்குவரத்து சேவையை துவங்க உள்ளோம். 

தினமும் செக்கடி மேட்டிலிருந்து இரவு 9.30 மணிக்கும், சென்னை மண்ணடியிலிருந்து இரவு 8.30 மணிக்கும் பேருந்து புறப்படும். 'குறித்த நேரம் பயணம் - மிதமான வேகம் - பாதுகாப்பான பயணம் - பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்தல் - கனிவான பணிவிடை - அனுபவமிக்க ஓட்டுனர்கள், மேம்படுத்தப்பட்ட ஆம்னி பஸ் உள்ளிட்டவற்றை பிரதானமாக கொண்டு இயங்க உள்ளது. 

மேலும் குறைந்த கட்டணத்தில் பொருட்களை உரியவரிடம் பத்திரமாக கொண்டு சேர்க்க பார்சல் சர்வீஸும் உண்டு. எங்கள் சேவை சிறக்க பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

பயண முன்பதிவு தொடர்புக்கு
9159494975 / 9944317144

2 comments:

  1. சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் ! இருந்தாலும் ஓட்டுநர்களுக்கு Releiver அவசியம் பயணிகளின் பாதுகாப்பிற்காக !

    ReplyDelete
  2. Congratulations and must appoint one of the reliever for the Driver it's most important of the passengers safety purpose.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.