தஞ்சாவூர் மாவட்டம், நல்லவன்னியன்குடிக்காடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று (24.10.2020) மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாடு குழு அலுவலர்கள் யாதேந்திரஜெயின், யூனுஸ், ஜெய்சங்கர், பஷந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது விவசாயிகளிடம் நெல்லின் தரம், ஈரப்பதம் எப்படி உள்ளது என கேட்டறிந்தனர். விவசாயிகள் கூறிய பதிலை குறிப்பெடுத்துக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூரில் இரவு தங்கினர். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) சிற்றரசு ஆகியோர் உடனிருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை 25-ம் தேதியும் இந்த குழுவினர் சில நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.