.

Pages

Thursday, October 22, 2020

2-1/2 வயது சிறுவனின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உதவ தள்ளுவண்டி வியாபாரி கோரிக்கை!

அதிரை நியூஸ்: அக்.22
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், இராமம்மாள்புறம், யூனியன் ரோடு பகுதியை சேர்ந்தவர் அஜ்மல்கான் (வயது 43). இவருக்கு வயது வந்த 1 பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளன. மதுக்கூரில் தள்ளுவண்டியில் சூப், சுண்டல் விற்று அன்றாட பிழைப்பு நடத்தி வருகிறார். 

இவரது மகன் முகமது ஷக்கில் (வயது 2-1/2). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சிறுவனின் அடிவயிற்று பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, வலி ஏற்பட்டதாம். இதையடுத்து, பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் முதற்கட்ட பரிசோதனை செய்து, பின்னர் அவரது பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையில், சிறுநீரகம் அருகில் கட்டி ஏற்பட்டு, வளர்ந்து வருவதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தினாராம். இதற்கான செலவு ரூ.1 லட்சத்திற்குள் மிகாமல் ஆகுமென மருத்துவமனை வட்டாரம் கூறியிருக்கிறதாம்.

இதைத்தொடர்ந்து, சிறுவனின் தந்தை அஜ்மல்கான், தான் செய்துவந்த தள்ளு வண்டி வியாபாரத்தை விட்டுவிட்டு, மகனின் மருத்துவ செலவீனங்களுக்கு, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிதி திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். எனினும், மருத்துவ அறுவை சிகிச்சைக்கு போதுமான நிதியை திரட்ட முடியவில்லை எனக் கூறி நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவரது மகனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ எண்ணுவோர், நேரடியாக அஜ்மல்கான் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள அஜ்மல்கான் அவர்களின் மனைவியின் வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமுதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மதுக்கூர் ஜமாத் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

அஜ்மல்கான் அவர்களின் மனைவியின் வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : Barsana Barvin A
Bank Name : INDIAN BANK
Branch : MADUKKUR BRANCH
A/C No. 6339769503

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 
7305196893

பரிந்துரை: வழக்குரைஞர் ஏ.முனாப், 
அதிராம்பட்டினம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.