திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மார்க்கத்தில் சென்னைக்கு தினசரி ரயில் சேவை தொடங்கவேண்டுமென பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல இரயில் பாதை அமைக்கும் பணிகள் 2012ல் துவங்க பெற்று 2017 இல் நிறைவு செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் இரயில் பாதைகள் அமைக்கும் பணிகளுக்கும் சரக்கு முனையம் அமைக்கவும் தனியாரிடமிருந்து ரயில்வே துறையால் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது .
வருவாய் துறையில் இருந்து இரயில்வே நிர்வாகத்திற்கு குறித்த காலத்தில் இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான கோப்புகள் இரயில்வே துறைக்கு செல்லாத காரணமாக நில உரிமையாளர்களுக்கு இரயில்வே துறையால் இழப்பீட்டுத் தொகை வழங்க காலதாமதம் ஆகி வந்தது.
இதனால் பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அமைக்கும் பணிகளில் ஒரு பகுதி நிறைவேறாமல் இருந்தது. இதனை கேள்வி யுற்ற பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் செயலாளர் வ.விவேகானந்தம் துணைத் தலைவர் கே லக்ஷ்மிகாந்தன் ஒருங்கிணைப்பாளர் எம் கலியபெருமாள் ஆகியோர் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி வி சேகர் அவர்களை சந்தித்து வருவாய்த் துறையிலிருந்து கோப்புகளை விரைந்து இரயில்வே துறைக்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்று க்கொண்ட பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அண்ணாதுரை அவர்களுக்கு தகவல் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர அவர்களும் விரைந்து நடவடிக்கை எடுத்து கோப்புகளை இரயில்வே துறைக்கு அனுப்பிய தன் பெயரில் நில உடைமையாளர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது.
எனவே பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் தடை பட்டிருக்கும் சரக்கு முனையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து தரவும் பட்டுக்கோட்டையிலிருந்து சரக்கு இரயில்கள் மூலம் சரக்கு போக்குவரத்தினை தொடங்கிடவும் தென்னக இரயில்வே பொதுமேலாளர் மற்றும் திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கும் கோரிக்கை மனுவினை பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் செயலாளர் வ.விவேகானந்தம் ஆகியோர் அனுப்பி உள்ளனர்.
அந்த கோரிக்கை மனுவில் "திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி அகல இரயில் பாதையில் சென்னை மற்றும் நாட்டின் இதர இடங்களுக்கான தினசரி இரயில் போக்குவரத்தை விரைவில் துவங்க வேண்டும்.
நில ஆர்ஜித ப் பணிகளால் தடைபெற்றுள்ள பட்டுக்கோட்டை இரயில் நிலைய சரக்கு முனைய கட்டுமான பணிகளை மீண்டும் துவங்கி முடிக்க வேண்டும்.
பட்டுக்கோட்டை பகுதியில் விளையும் நெல் ,தேங்காய் மாங்காய் அரிசி உப்பு கருவாடு போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யவும் , இப்பகுதிக்கு தேவையான உரம் பூச்சி மருந்து ஜவுளி கட்டுமான பொருட்கள் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்ய பட்டுக்கோட்டையில் சரக்கு போக்குவரத்தை தொடங்க வேண்டும்.
இரயில்வே துறையின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும், பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் சாலையிலிருந்து நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு செல்லும் புதிய தார்சாலையினை விரைந்து நிறைவு செய்து தர வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவாரூர் -பட்டுக்கோட்டை- காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சேவை துவங்க வேண்டும் எனில் இந்தப் பகுதியில் உள்ள அனைவரும் தங்களுக்கு தெரிந்த அரசியல்வாதிகள் அமைப்புகள் அல்லது அதிகாரிகள் வாயிலாக கடுமையாக முயற்சித்தால் மட்டுமே ரயில்கள் இயங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அனைவரும் போராட வேண்டும்.
ReplyDelete