அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (ESC) சார்பாக 10 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி காட்டுப்பள்ளி மைதானத்தில் அக்.16, 17 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது.இதில், அதிராம்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, திருவாரூர், பேய்கரும்பன்கோட்டை, காரைக்கால், தொண்டி, கீழக்கரை, நாகப்பட்டினம், திட்டச்சேரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 32 அணிகள் கலந்துகொண்டு விளையாடின.
விறுவிறுப்பாக நடைபெற்ற தொடர் போட்டியின் முடிவில், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற அதிரை WSC அணிக்கு ரூ.15 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்த பேய்கரும்பன்கோட்டை அணிக்கு ரூ.12 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த அதிரை ESC அணிக்கு ரூ.9 ஆயிரம், நான்காம் இடம் பிடித்த தஞ்சாவூர் அணிக்கு ரூ. 6 ஆயிரம் ஆகிய ரொக்கப்பரிசுகளும், சுழற்கோப்பை பரிசுகளும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.