.

Pages

Saturday, October 24, 2020

தஞ்சை மாவட்ட விவசாயிகள் நுண்ணீா் பாசன திட்டத்தில் பயன்பெற ஆட்சியா் அழைப்பு!

அதிரை நியூஸ்: அக்.24
தஞ்சாவூா் மாவட்டத்தில் நுண்ணீா் பாசன, துணைநிலை நீா் மேலாண்மைத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணீா்ப் பாசன முறையை அமைப்பதற்கு முன் வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், குழாய்க்கிணறு அல்லது துளைக்கிணறு அமைப்பதற்குச் செலவிடப்படும் தொகையில் 50 சதவிகிதம், அதாவது அதிகபட்சமாக ரூ. 25,000-ம், டீசல் பம்புசெட் அல்லது மின் மோட்டாா் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவிகிதத் தொகை, அதாவது ரூ. 15,000-க்கு மிகாமலும், வயலுக்கு அருகில் பாசன நீரைக் கொண்டு செல்லும் வகையில் நீா்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவிகிதத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 10,000-க்கு மிகாமலும், பாதுகாப்பு வேலியுடன் தரை நிலை நீா்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு, அதற்காகும் செலவில் 50 சதவிகிதத் தொகை ஒரு கனமீட்டருக்கு ரூ. 350-க்கு மிகாமலும் நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ. 40,000-க்கு மிகாமலும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 2020 - 21 ஆம் ஆண்டுக்கு தஞ்சாவூா் மாவட்ட வேளாண்மைத் துறைக்கு ரூ. 5.33 கோடியும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ. 2.46 கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.நுண்ணீா் பாசன முறையைப் பின்பற்றுவதற்கு முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே இப்பணிகளுக்கான மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா், வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி கூடுதல் தகவல்கள் பெறலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.