.

Pages

Friday, October 23, 2020

அதிராம்பட்டினத்திலிருந்து 'ராஹத்' ஆம்னி பஸ் சேவை மீண்டும் தொடக்கம்!

அதிரை நியூஸ்: அக்.23
அதிராம்பட்டினத்திலிருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து அதிராம்பட்டினத்திற்கு பயணம் மேற்கொள்ளவும் ராஹத் ஆம்னி பஸ் சேவை எதிர்வரும் (26-10-2020 ) திங்கள்கிழமை முதல் வழமைபோல் மீண்டும் தொடங்க உள்ளது.

'ராஹத்' ஆம்னி பஸ் சேவையின் அதிராம்பட்டினம் முகவர் முகமது சாலிகு கூறியது;
'வழமை போல் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பாண்டிச்சேரி ஈசிஆர் சாலை வழியாக சென்னை தாம்பரம், ஏர்போர்ட் வழியாக மண்ணடிக்கும், சென்னை மண்ணடியிலிருந்து எக்மோர், தி நகர், பாண்டிச்சேரி வழியாக அதிராம்பட்டினம் என இரு மார்க்கத்திலும் போக்குவரத்து சேவையை மீண்டும் துவங்க உள்ளோம். 

தினமும் அதிராம்பட்டினத்திலிருந்து இரவு 8.30, மணிக்கு இருகை வசதி மட்டும் கொண்ட பேருந்தும், இரவு 9 மணிக்கு ஏ.சி படுக்கை வசதி கொண்ட பேருந்தும், இரவு 9.15 மணிக்கு படுக்கை வசதி கொண்ட நான் ஏசி பேருந்தும் புறப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் சென்னை மண்ணடியிலிருந்து இரவு 8.30 மணிக்கு பேருந்து புறப்படும். 'குறித்த நேரம் பயணம் - மிதமான வேகம் - பாதுகாப்பான பயணம் - பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்தல் - கனிவான பணிவிடை - அனுபவமிக்க ஓட்டுநர்கள், மேம்படுத்தப்பட்ட வசதிகளை பிரதானமாக கொண்டு இயங்க உள்ளது. 

அதிராம்பட்டினம் ஜாவியா ரோடு, ஸ்டார் வாட்டர் சர்வீஸ் அருகில் உள்ள (டிஎஸ் டிராவல்ஸ்) ராஹத் ஆம்னி பஸ் அலுவலகத்தில் இருந்து பஸ் புறப்படும். சென்னையில் இருந்து அதிராம்பட்டினம் வரும் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு வசதி செய்துகொடுக்கப்படும்.

மேலும் குறைந்த கட்டணத்தில் பொருட்களை உரியவரிடம் பத்திரமாக கொண்டு சேர்க்க பார்சல் சர்வீஸும் உண்டு. எங்கள் சேவை சிறக்க பயணிகள், வர்த்தகர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

பயண முன்பதிவு தொடர்புக்கு
97 88 21 31 41 /  97908 28483

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.