.

Pages

Monday, October 19, 2020

தஞ்சை மாவட்டத்தில் 147 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள்: ஆர்.வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார்!

அதிரை நியூஸ்: அக்.19
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகளின் இயக்கத்தை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் இன்று (19.10.2020) கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 20.02.2020 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற 2020-2021 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது, குடியிருப்புகளின் அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் 3501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் துவக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவித்து, இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். 

அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 95 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 147 அம்மா நகரும் நியாய விலைக் கடை மையங்கள் செயல்படுத்த அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 147 அம்மா நகரும் நியாய விலைக்கடை மையங்களின் இயக்கத்தை மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (19.10.2020) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர், மாநிலங்களவை உறுப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் மூலம் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 21,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். அம்மா நகரும் நியாயவிலை கடைகள் திட்டத்தினால் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளில் நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்து பொருட்களை பெற்றுச் செல்லும் நிலை தவிர்க்கப்படும். பகுதிநேர கடைகள் திறப்பதற்கு வாய்ப்பில்லாத குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்து அத்தியாவசிய பொருட்களை வாங்குபவர்களுக்கு அம்மா நகரும் நியாய விலை கடை திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து, திருக்கானூர்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் தேவாரம் நகரிலும், வேங்கராயன்குடிகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் வடக்குப்பட்டிலும், துறையுண்டார்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சடையார்கோவிலிலும், மாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் தொட்டியிலும், பூதலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நாச்சியார்பட்டியிலும் அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் மூலம் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

பின்னர், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், மருங்குளத்தில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் 30-வது கிளையினை மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் திறந்து வைத்து, மத்தியகால விவசாய கடன் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு டிராக்டர் வாங்கிட ரூபாய் ஆறு லட்சம் கடனுதவி தொகையினையும், டாப்செட்கோ கடன் திட்டத்தின் கீழ் 12  சுய உதவிக் குழுவினருக்கு சிறு தொழில் தொடங்கிட ரூபாய் ஆறு லட்சம் கடனுதவி தொகையினையும், மகளிர் சுய உதவி குழு கடன் திட்டத்தின் கீழ் 96 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூபாய் 16 லட்சம் கடன் உதவி தொகையினையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மனோகரன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் திருமதி.பழனீஸ்வரி, ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், தஞ்சாவூர் நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வினுபாலன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மதியழகன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.