.

Pages

Sunday, November 10, 2013

10 வது வார்டு உறுப்பினர் சகோதரி சபுரன் ஜெமிலா அவர்களின் கோரிக்கை நிறைவேற்றம் !

அதிரைப் பேரூராட்சியின் 10 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்று பேருந்து நிலையம் ஈசிஆர் சாலையிலிருந்து செல்லும் தைக்கால் ரோடு ஆகும். இந்த சாலை ஆஷாத் நகர் [ தரகர் தெரு ], கடற்கரைத்தெரு, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையை ஒட்டி அமைந்துள்ள கழிவு நீர் வாய்க்காலில் ஆங்காங்கே காணப்படும் அடைப்புகளால் மழைகாலங்களில் நீர் தேங்கி காணப்பட்டு வந்தன. இதனால் இந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வந்தது. 

இதையடுத்து அப்பகுதியின் 10 வார்டு உறுப்பினர் சகோதரி சபுரன் ஜெமிலா மற்றும் பட்டுக்கோட்டை வட்டார இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை மைதீன் ஆகியோர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களோடு சேர்ந்துகொண்டு, பேரூராட்சி நிர்வாகம் வடிகால் வாய்க்காலில் சுத்தம் செய்யும் பணிகளில் ஏற்படும் கால தாமதத்தைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்திற்கான அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துண்டு பிரசுரமாகவும், நாளிதழ் மற்றும் 'அதிரை நியூஸ்' தளத்திலும் செய்தியாக வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவசரமாக கவனத்தில் எடுத்துக்கொண்ட அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பந்தபட்டோரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாதிப்புக்குள்ளான பகுதிகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு வருகின்ற இரண்டு மாதத்திற்குள் சரிசெய்து கொடுப்பதாக எழுத்து மூலம் கையொப்பமிட்டு உறுதி செய்ததையடுத்து கடந்த [ 13-06-2013 ] அன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டமும் கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக ரூபாய் 3.30 இலட்சம் நிதி உதவின் கீழ் புதிதாக வாடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியில் ஊழியர்களை மும்முரமாக ஈடுபடுத்தியுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியை தெரியப்படுத்தியுள்ளனர். 

பணிகள் விரைவாக நிறைவேறியதில் சபுரன் ஜெமிலா அவர்கள் தனது நன்றியை அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், செயல் அலுவலர், இதர வார்டு உறுப்பினர்கள், ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்கள் ஆகியோருக்கு அன்புடன் தெரிவித்துக்கொண்டார்.


3 comments:

  1. அதிரைப் பேரூராட்சிக்கு நன்றிகள் பல.

    இதற்க்கு முயற்சி செய்த சகோதரி சபுரன் ஜெமிலா அவர்களுக்கும் இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை மைதீன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தனது வார்டு மக்களின் கோரிக்கையினை நிர்வாகத்தினர்க்கு பல போரட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி சாதித்த வார்டு உறுப்பினர்க்கும் பேரூராட்சி செயலர் மற்றும் தலைவர்க்கும் ஹாஜா நகர் ரியாஸ் சார்பாக வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.