.

Pages

Monday, November 11, 2013

அதிரையில் பணிபுரியும் பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு !

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே. ஹெர்பல்பாய் (43). அதிரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்திலுள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருக்கும் இவர், தினமும் பேருந்தில் பள்ளிக்குச் சென்று திரும்புவார். இந்நிலையில், சனிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற இவர், மாலையில் பேருந்தில் பட்டுக்கோட்டைக்கு திரும்பினார். பேருந்து நிலையத்தில் இறங்கி விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், ஹெர்பல்பாய் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

நன்றி : தினமணி

1 comment:

  1. திருட்டு பயல்கள் அவன்களை புடிச்சி உள்ளே போடுங்க சார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.