இந்த ஆர்பாட்டத்திற்கு SDPI கட்சியின் நகரத்தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகிக்க, வரவேற்புரையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது நிகழ்த்த, துவக்க உரையை தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இல்யாஸ் நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட SDTU மாநில துணைத்தலைவர் ஷம்சுதீன், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் காளிதாஸ், விவசாய விடுதலை முன்னணி பொறுப்பாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சேக் ஜலாலுதீன், சாகுல் ஹமீது, அஹமது இப்ராஹீம், சலீம் மாலிக், ரசூல், அப்துல் ஜலீல், முபீன், உமர ஆகியோர் முன்னிலை வகிக்க, நன்றியுரைய அன்வர்தீன் நிகழ்த்தினார்.
கூட்டத்தின் தீர்மானங்களாக அதிரையில் தீயணைப்பு நிலையம், 108 ஆம்புலன்ஸ் வசதி, அரசு மருத்துவமனை 24 மணிநேர சேவை ஏற்படுத்த அரசை வலியுறுத்துவது, இந்தகோரிக்கை துரிதமாக நிறைவேற்ற உதவிட அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் NR. ரெங்கராஜன் MLA ஆகியோரை SDPI கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்வது உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் தோழர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
nantrikal pala
ReplyDeletenantrikal pala
ReplyDelete