.

Pages

Sunday, November 3, 2013

கத்தி குத்தில் மதுக்கூர் வாலிபர் பரிதாப பலி !

மதுக்கூரை சேர்ந்த வாலிபர் முஹம்மது தாரிக் [ வயது 24 ] நேற்று மாலை அதே ஊரைச் சேர்ந்த மதுக்கூர் மைதீன் மற்றும் நியாஸ் ஆகியரோடு ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்டார். உடலில் 3 இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதையடுத்து இறந்த உடல் பிரத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பிரத பரிசோதனை முடிந்ததை அடுத்து இன்று மதியம் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மதுக்கூர் பெரிய பள்ளியில் மதியம் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


19 comments:

  1. இயக்கங்கள் இருக்கும் வரை இப்படிப்பட்டவைகள் தொடரும்; வன்முறைகள் படரும். இதுதான் இயக்கத்தில் இணைந்தவர்கட்குக் கிடைக்கும் இழப்பாகும். கல்விச்சாலைகளை நிரப்பாமல், சிறைச்சாலைகளும், நீதிமன்றங்களும் தேடி நம் இனிய இளைஞர் சமுதாயம் வெறி கொண்டலைய வைத்ததும் போதும்; போதும்,

    ReplyDelete
    Replies
    1. அண்ணன் எதுக்கு எத போய் சம்மதம் படுத்தி பேசுரிக ..... நம்முடைய வாழ்வுக்கஹா சிறை சாலை போறோம் ...

      Delete
    2. மதங்களிக்கிடையே சண்டை வந்தால் மதங்கள் கூடாது என்றும், குடும்பங்களுக்கிடையே சண்டை வந்தால் குடும்பமே கூடாது என்றும் சொல்வீர்களா ? கத்தி எடுத்தது தவறு, கோபம் கொள்வது தவறு என்று சொன்னால் அதில் நியாயம் உள்ளது

      Delete
    3. சிறை சென்றுதான் வாழவேண்டும் என்று எங்கு சொல்லப்பட்டுள்ளது? சிறையில் மாட்டிக்கொண்டவர்கள் வாழ்வு, அவர்கள் குடும்பங்கள் என்னவாயிற்று? சிறை செல்லாமல் வாழ்வது வாழ்வா? சிறை சென்று வாழ்வது வாழ்வா? தவறாக வழி நடத்தப்படுகிறீர்கள் என்றுதான் மனதில் படுகிறது. இயக்கம் வேண்டும் என்றால், சிறை செல்லாமல் வழிநடத்தும் இயக்கம் இல்லையா?

      Delete
    4. மனிதன் நிம்மதியாக வாழ தடையாக உள்ளவைகள் அனைத்தும் கூடாதுதான்.

      Delete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
    இது இயக்கங்களால் துண்டப்படுவது இல்லை .இயக்கங்கள் பெயரை வைத்து சில பேர் இப்படிப்பட்ட காரியங்களில் இடுப்படுகின்றனர்.

    ReplyDelete
  3. எந்த இயக்கமும் இது போன்று தூண்டாது உண்மைதான். இருந்தாலும் இயக்கங்கள் பல உண்டானதால் இது போன்று இளைங்கர்கள் மத்தியில் உருவாகும் நிலையை காணமுடிகிறது. ஒரே இயக்கம் ஆசை. பலர் தலைமை பொறுப்பை விரும்புவதினால் இப்படி பல இயக்கம் உருவாகி... பாவம் இளங்கர்கள். நோக்கம் சமுதாய முன்னேற்றம். விளைவு சமுதாய பின்னேற்றம். யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. சமுதாயங்கள் சீரழிகின்றது. என்றுதான் திருந்துமோ.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இத்தகைய நிகழ்வுகளை கேள்விப்படும் போது மனம் கனத்துப் போகிறது. வேதனையளிக்கிறது. அல்லாஹ் தான் நமது இளைய சமுதாயத்திற்கு நற்ச் சிந்தனையையும் நற்ச் செயல்களை செய்யும் மனதினையும் கொடுக்கவேண்டும்.

    ReplyDelete
  8. ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்-இந்த குர்ஆன் வசனம் யாருக்காக? எல்லா இனத்தவரும் இந்த வசனத்தை ஒரு கணம் யோசித்தால் எல்லா இயக்கங்களும் இந்த வசனத்திற்கு முன்னால் தவிடு பொடியாகிவிடும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

    ReplyDelete
    Replies
    1. noor, i appreciate ur comment. just think this lines brothers

      Delete
  9. Inna lilaahi va inna ilaihi rAJIvoon

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. 4:93. எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    முன்பல்லாம் சண்டைகள் வந்தால் அடித்தி கொண்டு தெருவில் புரள்வார்கள் இப்போது கத்தியால் குத்துகிறார்கள் என்ன கொடுமை இது.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.