இன்று நடைபெற்ற மஜ்லீசில் முன்னாள் மத்திய அமைச்சர் C.A. இப்ராஹீம் அவர்கள் கர்நாடாக மாநிலத்திலிருந்து வருகை தந்து கலந்துகொண்டார். இதில் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு துஆ ஓதப்பட்டன.
முன்னதாக இன்றைய மஜ்லீசில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரை ஜாவியா நிர்வாக கமிட்டி செயலர் M.B அபூ பக்கர், பொருளாளர் சேக் அலி உள்ளிட்ட இதர நிர்வாகிகள் அனைவரும் அன்புடன் வரவேற்றனர்.
வருகை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் C.A. இப்ராஹீம் அவர்களிடம் அதிரை நியூஸ் சார்பாக கருத்து கேட்கப்பட்டது...
'பல ஆண்டுகளாக அதிரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த புனித மிக்க மஜ்லிசில் தொலைதூரத்திலிருந்து வருகை தந்து கலந்து கொண்டதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்த மஜ்லீசால் இந்த ஊர் மற்றும் இந்த ஊரைச்சுற்றியுள்ள பகுதிகள் மிகுந்த சிறப்பைபெறும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு வருடமும் நடைபெற உள்ள இந்த மஜ்லீசில் நான் தொடர்ந்து கலந்து கொள்ள இறைவன் நல்அருள் புரிய வேண்டும். இந்த மஜ்லிசை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வரும் நிர்வாகத்தினருக்கும், சிறந்த சொற்பொழிவுகளை வழங்கிவரும் ஆலிம் பெருமக்களுக்கும், கலந்துகொண்டு சிறப்பிக்கும் இந்த ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இறைவன் ரஹ்மத்தையும், பரக்கத்தையும் வழங்க வேண்டும் என துவா செய்கிறேன்' எனக் கூறினார்.
எந்த நேரமும் திக்ரில் திளைத்திருக்கும் நாவு சொர்கவாதியின் அடையாளம் [திக்ர் மஞ்ளிஸ் சிறப்பாக ஜாவியாளில் தினமும் நடைபெற பிரார்த்திப்போமாக]
ReplyDeleteEthi adirai kku kedaiththa mapearum pokkesam.
ReplyDeleteஎந்த நேரமும் திக்ரில் திளைத்திருக்கும் நாவு சொர்கவாதியின் அடையாளம்
ReplyDeleteஜாவியாவில் தினமும் திக்கிர் சிறப்பாக நடைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆன்மீக ஆர்வம் உள்ளவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
ReplyDeleteசூப்பர்
ReplyDelete