.

Pages

Saturday, November 30, 2013

மதுக்கூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரையர் பங்கேற்பு !

மதுக்கூர் AKS திருமண மஹாலில் இன்று காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஹாஜி P.S. ஹமீது தலைமையேற்க, மாவட்ட பொருளாளர் A.M அப்துல் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் எதிர்வரும் [ 28-12-2013 ] அன்று நடைபெற உள்ள இளம்பிறை மாநில மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தின் சார்பாக பெறும் திரளாக கலந்துகொண்டு மாநாட்டின் நோக்கம் வெற்றியடைய பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிரை S.S.B. நசுருதீன், S.B இஸ்மாயில், காயல் மஹபூப், S.A.M இப்ராஹீம் மக்கி, ஆடுதுறை A.M ஷாஜஹான், M.K. முஹம்மது யூனுஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில பொதுச்செயலாளர் K.A.M. முஹம்மது அபூபக்கர் சிறப்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 






3 comments:

  1. இளம்பிறை மாநில மாநாட்டின் நிய்யத் நிறைவேறட்டும். இன்சா அல்லாஹ்.

    ஓரிரு சீட் என்ற நிலையிலிருந்து விடுபட்டு இஸ்லாமிய கட்சிகளுக்கு விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கும் கட்சியுடன் மட்டும் இணக்கம் என்ற நிய்யத்துடன் தீர்மானமும் அமையட்டும்.

    ReplyDelete
  2. Otdu moththa eslameyarkalen porval muslem leak.

    ReplyDelete
  3. தமிழகத்தின் பரபரப்பு முன்னணி பத்திரிக்கையான நக்கீரனில் ஒரு செய்தி ஞாபகம் வருகிறது.

    முஸ்லிம்களின் பத்து சதவிகித ஒட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு என்றும் மூன்று மற்றும் அதற்கு கீழே மற்றவைகளுக்கு என்றும் கணிப்பு போட்டுள்ளார்கள்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம்களின் அனைத்து ஊர் மஹல்லா ஜமாஅத் வலுப்பட வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தி அனைத்து ஊர் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடுகள் நடத்துகின்றது. பரபரப்பு அரசியல் அதன் கொள்கையில் இல்லை. சாதுரியாமாகவே முஸ்லிம்களின் உரிமைகளை மீட்டுத் தருகிறது. எல்லோரையும் அரவணைத்து செயல்படுகிறது. அதனால் எந்த இயக்கத்தில் இஸ்லாமியர்கள் இருந்தாலும் அதன்மீது ஒரு தாயன்பு காட்டவே செய்கிறார்கள். அதனாலோ அதனைத் தாய் சபை என்றும் அழைக்கின்றனர். பரபரப்பு பல கவர்ச்சிகள் இல்லாது இஸ்லாமிய அரசியல் வழிகளை அது கடைபிடிக்கின்றது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.