.

Pages

Thursday, November 21, 2013

N.R. ரெங்கராஜன் MLA அவர்களின் முயற்சியில் அதிரை அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை விரைவில் துவக்கம் !


அதிரை பகுதிகளில் இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வருகின்றது. உள்ளூர் மருத்துவர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே இருகின்றது. அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன. ஆகவே இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும் பல்வேறு அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, வர்த்தக சங்கம், பல்வேறு சமுதாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் , தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தி வந்தாலும், கடந்த [ 01-06-2013 ] அன்று நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மரியாதைக்குரிய N.R. ரெங்கராஜன் MLA அவர்களை அதிரை நியூஸ் சார்பாக மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டி நேரடியாக சந்தித்து வலியுறுத்தினோம். அந்த கோரிக்கைகளில் ஒன்றாகிய அரசு பொதுமருத்துவமனையின் கூடுதல் மருத்துவருடன் கூடிய 24 மணி நேர சேவையும் ஆகும்.

இவற்றை கண்டிப்பாக நிறைவேற்றித்தர முயற்சிக்கிறேன் என்று அப்போது எங்களிடம் தெரியப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக கடந்த 18-11-2013 அன்று சென்னையில் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் திரு ராதாகிருஷ்ணன் IAS அவர்களை நேரடியாகச் சந்தித்து அதிரை அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்களை பணி புரிய வைக்க வேண்டியதன் தேவை குறித்து விளக்கி கூறியிருக்கிறார். இவற்றை பொறுமையாக கேட்டுக்கொண்ட அலுவலர் அவர்கள் வெகு சில நாட்களில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அதிரை நகர மக்களுக்காக கடும் முயற்சியின் கீழ் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்துள்ள மரியாதையைக்குரிய  நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களுக்கு நன்றியையும் - பாராட்டுகளையும் அதிரை நகர மக்கள் - அதிரை நியூஸ் இணையதளம் சார்பாக அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிரை நியூஸ் குழு

16 comments:

  1. உங்களது சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல முயற்சி தொடர்ந்து இந்த சேவை நடைப்பெறனும் வாழ்த்துக்கள் MLA அவர்களுக்கு.

    ReplyDelete
  3. நன்றி ! நன்றி !! நன்றி !!!....

    அதிரை பகுதிகளில் இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருந்துவ முதலுதவி என்பது பெரும் கேள்வி குறியாக இருந்து வந்தது.கால கட்டத்தில் அதிரை நகர மக்களுக்காக கடும் முயற்சி எடுத்து நமதூர் மக்களின் நீண்ட நாள் கவலையை தீர்த்துவைத்து நமதூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடர உதவிய மரியாதையைக்குரிய நமது சட்டமன்ற தொகுதி உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் பாடாட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி ! நன்றி !! நன்றி !!!....

    அதிரை பகுதிகளில் இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருந்துவ முதலுதவி என்பது பெரும் கேள்வி குறியாக இருந்து வந்தது.கால கட்டத்தில் அதிரை நகர மக்களுக்காக கடும் முயற்சி எடுத்து நமதூர் மக்களின் நீண்ட நாள் கவலையை தீர்த்துவைத்து நமதூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடர உதவிய மரியாதையைக்குரிய நமது சட்டமன்ற தொகுதி உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் பாடாட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. இந்த கோரிக்கையை MLAவிடம் எடுத்து சென்ற அதிரை நியூஸ் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இந்த கோரிக்கையை MLAவிடம் எடுத்து சென்ற அதிரை நியூஸ் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Namma m.l.a. Avarkalen pane serakka valththu kenrean. Nr avarkalaippol matra varkalumvaraveandum. Nr. Vaalka...avar pane vaalka....kaagkeras vaalka....vaalkavea.

    ReplyDelete
  8. நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்துள்ள மரியாதையைக்குரிய நமது சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மரியாதைக்குரிய N.R. ரெங்கராஜன் MLA அவர்களுக்கு நன்றியையும் - பாராட்டுகளையும் அதிரை நகர மக்கள் - அதிரை நியூஸ் இணையதளம் சார்பாக அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  9. திரு ரெங்கராஜன் M.L.A அவர்களிடம் அதிரை நியூஸ் வைத்த கோரிக்கையை மக்கள் நல்வாழ்வு துறை செயலர் திரு ராதாகிருஷ்ணன் IAS அவர்களிடம் எடுத்துச்சென்ற M.L.A- அவர்களுக்கும் அக்கோரிக்கையை அவர்கள் வெகு சில நாட்களில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியளித்து பொறுப்புணர்வோடு பதிலைத்தமைக்கும் மிக்க நன்றினைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    விரைவில் நடைமுறைப்படுத்தப் படவேண்டும்.

    ReplyDelete
  10. இந்த கோரிக்கையை MLAவிடம் எடுத்து சென்ற அதிரை நியூஸ் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. பதிவுக்கு நன்றி.

    திரு ரெங்கராஜன் M.L.A அவர்களிடம் அதிரை நியூஸ் வைத்த கோரிக்கையை மக்கள் நல்வாழ்வு துறை செயலர் திரு ராதாகிருஷ்ணன் IAS அவர்களிடம் எடுத்துச்சென்ற M.L.A- அவர்களுக்கும் அக்கோரிக்கையை அவர்கள் வெகு சில நாட்களில் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியளித்து பொறுப்புணர்வோடு பதிலைத்தமைக்கும் மிக்க நன்றினைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

    விரைவில் நடைமுறைப்படுத்தப் படவேண்டும்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  12. Adirai el oru valaithala seavai anral athu adirai newssakaththan erukkum.

    ReplyDelete

  13. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இரவு நேரசேவையைதுவக்குவதற்கு. மக்கள் நல்வாழ்வு துறை செயலர் திரு. ராதாகிருஷ்ணன் IAS அவர்களிடம்எடுத்துச்சென்ற எங்கள் தொப்புள்கொடி உறவான.சஹோதரர் N.R.ரெங்கராஜன் MLA அவர்களுக்கு எங்கள் அதிராம்பட்டினம் மக்களின் சார்பாகவும் அவர் உடல் நல்லாரோக்கியத்துடன் மீண்டும் மீண்டும் எல்லா மக்களுக்கும் நர்பனிசெய்வதர்க்கு எங்கள் வல்ல இறைவனிடம் துவா செய்தவனாகவும் அதே சமயம் எங்களுக்கு சுட சுட செய்திகளை பஹிர்ந்து கொண்டு தரும் இனைய தலமான அதிரை நியூஸ் சஹோதரர்களுக்கும் துவா செய்தவனாய் உள்ளேன்

    இப்படிக்கு.AMS குலாம் முகமது
    துபாய்

    ReplyDelete
  14. Ams kulammohameed matrum adirainews kudumpaththarkal anaivarukkum nanre....nanre...nanre.

    ReplyDelete
  15. இந்த கோரிக்கையை MLAவிடம் எடுத்துச்சென்ற அதிரை நியுஸ் சகோதர்களூக்கு நன்றி.....

    ReplyDelete
  16. இந்த கோரிக்கையை MLAவிடம் எடுத்துச்சென்ற அதிரை நியுஸ் சகோதர்களூக்கு நன்றி.....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.