.

Pages

Friday, November 15, 2013

அதிரை அருகே உள்ள அணையில் குளித்து மகிழும் இளைஞர் பட்டாளங்கள் [ புகைப்படங்கள் ] !

அதிரையிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தொக்காலிக்காடு கிராம். விவசாய கிராமமான இங்கு பெரும்பாலானோரின் தொழிலாக தென்னை மற்றும் தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பச்சை பசேல் என குளுமையுடன் காட்சியளிக்கும் இந்த கிராமத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடியது மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் நீர் ஆகும். இந்த நீரை எடுத்துதான் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுவும் குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே பயனைத்தரும். மற்ற நேரங்களில் இந்த அணை நீரின்றி வறணடே காட்சியளிக்கும்.

எந்தவருடமும் இல்லாத அளவு இந்தவருடம் பொய்த்து போன மழையால் அதிரையில் உள்ள அனைத்து குளங்களும் நீரின்றி வறண்டு காணப்பட்டு வருகின்றன. அதிரையர் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நீந்தி மகிழ்ந்த நமதூர் குளங்கள் இன்று நீரின்றி வற்றிப்போய் அழகு இழந்து அநாதரவாய் கிடக்கின்றன. இருக்கும் மற்ற சில குளங்களிலும் கழிவு நீர்கள் சூழ்ந்து காணப்படுவதால் தினமும் குளத்திற்கு சென்று குளித்து மகிழுவோருக்கு சற்று வேதனையை ஏற்படுத்திருக்கக்கூடும்.

அதிரையை சுற்றி இருக்கக்கூடிய சின்ன ஏரி, பெரிய ஏரி, ராஜாமடம் அணை ஆகிய நீர் நிலைகளை நாடிச்செல்வது இவர்களுக்கு வழக்கமான ஒன்றாக இருந்தாலும் தொக்காலிகாட்டில் உள்ள மஹாராஜ சமுத்திர அணையில் குளிப்பதற்கு ஏற்ற அமைப்பில் சற்று இலகுவாக அமைந்திருப்பதால் அதிகமானோர் விரும்பிச் செல்கின்றனர். குறிப்பிட்ட சில வாரங்களில் மாத்திரமே நீரைக்கொண்டுள்ள இந்த அணையில் வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக தாயகம் வரும் இளைஞர்களும், உள்ளூரில் வசிக்கும் இளைஞர்களும் என அதிகமானோர் இந்த அணைக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தண்ணீர் வரத்து மிதமாக இருப்பதால் அதிகமான நேரம் குளித்து மகிழ்கின்றனர். பயணத்திற்காக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் இவர்கள் குளித்து முடித்தவுடன் காலை பசியாற அணையின் அருகில் உள்ள ஆழ மரத்தடியின் நிழலில் அமர்ந்து வாங்கிச் செல்லும் புரோட்டாவை  உண்டு மகிழ்கின்றனர். இங்கு சென்றுவர அதிகமாக வார விடுமுறை தினங்களை இவர்கள் பயன்படுத்திக் கொள்ள தவறியதில்லை.

செய்தி தொகுப்பு : அதிரை நியூஸ்
புகைப்படங்கள் : ஜெஹபர் சாதிக், தஸ்லீம் ஆரிப்








12 comments:

  1. Ada...annagkappa rompa arumayaha erukku.. Ugka kuleyal arumaikku pearumai searththa adirai newssuk no 1 podu

    ReplyDelete
  2. பார்க்கும் போதே குளிக்கணும் போல ஆசையா இருக்கு

    ReplyDelete
  3. அதிரை நியூஸ் எடிட்டர் மறந்துவிட்டார் போலும் உங்களது இணையத்தளத்தை அதிரை ஆண்கள் மட்டும் பார்ப்பது இல்லை அதிகமான பெண்களும் பார்த்து ஊர் விசயத்தை தெரிந்துக்கொல்கிரார்கள்
    அதாலால் இதை போன்று அநாகரிகமான புகைப்படத்தை பதிவு செய்வதை
    தவிர்த்துக்கொள்வது உங்கள் இணையத்தளத்தின் மீது நல்ல மரியாதை வைப்பதற்கு மிகவும் அதிரை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

    நெய்னா முஹம்மத் @ ரியாத்

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    இதிலே என்ன இருக்கு அநாகரிகம் புகைப்படம் மிஸ்டர் நெய்னா முஹம்மத்.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்
    பருவமடைந்த ஒரு பெண்ணோ அல்லது ஒரு ஆணோ குளித்துவிட்டு(அ)சாதாரண நிலையிலோ ஒரு பெண் தன் சகோதரனின் மேனியில் துணியில்லாமல் பார்பதாக இருந்தாலும் சரி அல்லது ஒரு ஆண் தன் சகோதரி மேனியில் துனியில்லாமலோ அல்லது அரைகுறை ஆடையிலோ பார்ப்பதை மார்கத்தில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று குர் ஆன், ஹதீஸ் மற்றும் மார்க்க அறிஞர்களும் நமக்கு போதித்திருக்க எப்படி? இது அநாகரிகமான செயலில்லை என்று மறுக்க இயலும் அப்படி யாரேனும் இது நாகரிகமானது என்று வாதம் கற்பித்தால் அது அவருடைய ஈமானின் பலகீனத்தையே எடுத்துக்காட்டும்
    சகோதரர் நைனா அவர்கள் கூறியதுபோல் இது சமூக இணையதலமென்பதாலும் பெண்களும் இதை பார்கக்கூடுமென்பதாலும் தயவு செய்து மேனியில் ஆடையில்லாமல் காட்சிதரும் புகைப்படத்தை உடனடியாக நீக்குபடி கேட்டுக்கிறேன்

    ReplyDelete
  6. அன்புச்சகோதரர் நெய்னா முஹம்மது [ ரியாத் ] மற்றும் நண்பர் அதிரை மடல் ஆகியோரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் இந்த பதிவுலிருந்து நீக்கம் செய்யப்படுகிறது.

    தொடர் ஆதரவிற்கும் - ஆலோசனைக்கும் மிக்க நன்றி !

    ReplyDelete
  7. அஸ்ஸலமு அழைக்கும்
    எங்களது மனவுணர்வை புரிந்துகொண்டதோடுமட்டுமல்லாமல் அல்லாஹ்வின் வேதத்தை, அவனுடைய தூதரின் வார்த்தைக்கு மதிபளித்து சர்ச்சைக்குரிய புகைப்படத்தை நிக்கிய அதிரை நியூஸ் வலைதளத்திற்கு அல்லாஹ்வின் உதவி என்றென்றும் கிடைக்கட்டுமாக என்று பிராத்தித்தவனாக மேலும் அந்த நான்காவது புகைப்படத்தில் வலது ஓரத்தில் ஒருவர் மேலாடையில்லாமல் காட்சியளிப்பதால் அதையும் நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  8. அஸ்ஸலமு அழைக்கும்

    எங்களது மனவுணர்வை புரிந்துகொண்டதோடுமட்டுமல்லாமல் அல்லாஹ்வின் வேதத்தை, அவனுடைய தூதரின் வார்த்தைக்கு மதிபளித்து சர்ச்சைக்குரிய புகைப்படத்தை நிக்கிய அதிரை நியூஸ் வலைதளத்திற்கு அல்லாஹ்வின் உதவி என்றென்றும் கிடைக்கட்டுமாக !

    ஆமின்

    நெய்னா முஹம்மத் @ ரியாத்

    ReplyDelete
  9. Madal ethallam rompa va theateyala 4 nkavathu padaththel oruvarai appade neekka mudeyum.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அழைக்கும்
    அன்புச்சகோதரர் ஷாகுல் ஹமீது நீங்க தவறா விளங்கிகிட்டீங்க நான் சுட்டிக்காட்டி நீக்கக்கோரியது நான்காவது புகைப்பட முழுவதையும்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.