.

Pages

Saturday, November 9, 2013

புதிய முயற்சியில் அதிரை பேரூராட்சி !

அதிரை நகர மக்களால் அன்றாடம் சேருகின்ற குப்பை கூளங்களை அந்ததந்த பகுதிகளில் உள்ள குப்பை தொட்டிகளில் இட்டு செல்வது வழக்கம். இதில் சில இடங்களில் குப்பை தொட்டி பற்றாக்குறையாக காணப்பட்டு வந்தன. மேலும் சில சாலைகளின் ஓரங்களில் உள்ள குப்பைகள் நகரில் சுற்றித்திரியும் ஆடு மாடுகளால் சிதறி காணப்பட்டும் வந்தன. இதனால் தூர் நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வந்தது.

இதற்காக புதிய வடிவமைப்புடன் குப்பை தொட்டிகள் தயாரிக்ககப்பட்டு நகரில் முக்கிய பகுதிகளில் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ரூபாய் 8000 செலவாகும் இவ்வகை குப்பை தொட்டிகளை தயாரிக்க அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள், அதிரை நகர தொழில் அதிபரிடம் பேரூராட்சிக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க எவர்கோல்ட் வணிக வளாகத்தின் உரிமையாளர் செல்வம் அவர்கள் 5 குப்பைதொட்டிகளுக்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.

தயாரான முதல் குப்பைத்தொட்டியை கடற்கரைத்தெருவில் உள்ள பிராதான இடத்தில வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த தொட்டிகள் நகரில் முக்கிய பகுதிகளில் வைப்பதற்கு உத்தேசித்துள்ளனர்.

கையாள்வதற்காக இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த தொட்டியை பற்றாக்குறையாக இருக்கிற மற்ற பகுதிகளிலும் வைப்பதற்கு அதிரை செல்வந்தர்கள் உதவ முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளும் அதிரை பேரூராட்சித்தலைவர் சார்பாக விடப்பட்டுள்ளது.


நகரில் குமியும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி முறையில் சீர்படுத்த உதவும் சாதனம். விரைவில் தனது பணியை துவங்க உள்ள இந்த சாதனம் அதிரை பேரூராட்சியின் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது.

4 comments:

  1. பாராட்டப் படவேண்டிய நல்லதொரு முயற்சி.

    இத்திட்டம் நமதூரின் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாக வெற்றிபெற வேண்டும்.

    ///எவர்கோல்ட் வணிக வளாகத்தின் உரிமையாளர் செல்வம் அவர்கள் 5 குப்பைதொட்டிகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.///

    இத்திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக பொதுநல நன்னோக்குடன் உதவ முன்வந்த தொழில் அதிபருக்கும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும்
    நல்ல முயற்சி பாராட்டுகள் .
    தரை மட்டதில் இருந்து அரை அடிக்கு மேல் கால் மாடலில் செயதால் துரு பிடிக்காமல் இருக்கு மல்லவா கொஞ்சம் யோசிக்கும் படி கேட்டு கொள்கின்ரேன்.
    இந்த மாடல் பயன் பாட்டிற்கு இலகுவாக உள்ளதா என்று பார்து பின்பு மீதம் உள்ள தேவை களுக்கு செய்வது நலம் .

    ReplyDelete
  3. நல்லதோர் முன்னேற்றம் வாழ்க நலமுடன் மக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.