.

Pages

Tuesday, November 26, 2013

பழுதடைந்த சிஎம்பி லேன் சாலை சீரமைப்பு !

அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சிஎம்பி லேன்னும் ஒன்று. இந்தப் பகுதியில் அமைந்துள்ள வண்டிப்பேட்டையிலிருந்து வள்ளியம்மை நகர் வழியாகச் செல்லும் பிரதான சாலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. கிராமங்களை இணைக்கும் இந்த சாலை பல வருடங்களுக்கு முன்பு போட்டப்பட்டது. இவை புதுப்பிக்காமல் இருந்ததனால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளித்து வந்தன. மழை காலங்களில் இந்த சாலை வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், வழிபாட்டுத்தளங்களுக்கு செல்லுவோர் என அவதியுற்று வந்தனர்.

இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள், உள்ளூர் செய்திகளை வழங்கி வருகின்ற இணையதளங்கள் ஆகியன அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை வைப்பது தொடர்ந்து வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரையில் பெய்த தொடர் மழையால் குண்டு குழியுமாக உள்ள இடங்களில் நீர் தேங்கி சகதிகளாக காட்சியளித்தன. 

இந்த பகுதியின் 21 வது வார்டு உறுப்பினர் இப்ராஹீம் அவர்கள் பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்சென்று சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இன்று காலை அதிரை பேரூராட்சியின் சார்பாக குண்டு குழியுமாக காணப்படும் இடங்களில் கிராவல் ஜல்லி கொட்டப்பட்டு பழுதடைந்த சாலைகளை சீரமைத்து வருகின்றனர்.

இது குறித்து 21 வது வார்டு உறுப்பினர் இப்ராஹீம் அவர்களிடம் தொலைபேசியில் பேசிய வகையில்...
இந்த சாலையை நிரந்தரமாக புதுப்பிக்ககூடிய பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்றும், பொதுமக்கள் நலன் கருதி இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு பழுதடைந்த சாலையை சீரமைக்க ஏற்பாடு செய்த அதிரை பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் ஆகியோருக்கு தனது நன்றியையும் பாராட்டுதலையும் அன்புடன் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். 




4 comments:

  1. நல்லது நடந்தால் சந்தோசம்தான் இதற்கு முயற்சி செய்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அப்படியே கடைத்தெருவிலிருந்து மகிழங்கோட்டை செல்லும் சாலையையும் சீர்செய்தால் ரொம்ப புண்ணியமாக இருக்கும்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    மழை காலத்தில் நல்ல கலியாயக இருக்கும்.
    வெயில் காலத்தில் நல்ல தூசியாக இருக்கும்.

    செய்வன திருந்த செய்.
    இல்லையேல் செய்யாமல் இரு.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. ரோடு போட்டா ஒழுங்கா போடாமே இப்படியா கரடு முரடா போடுவது?

    துப்பட்டிஎல்லாம் வீணா போய்விட்டது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.