கடந்த மாத துவக்கத்தில் லண்டன் குரைடன் பகுதியில் அதிரையரின் ஒத்துழைப்புடன் தமிழ்ச் சமுதாயம் சார்பாக துவங்கப்பட்ட தமிழ் பேருரையுடன் கூடிய ஜூம்மா தொழுகை தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு "அல் ஹிதாயா முஸ்லிம் வெல்பர் அசோசியேசன்" என பெயரிட்டு இருக்கிறது.
இந்த அமைப்பின் சார்பில் வரும் நவம்பர் 16 ந்தேதி சனிக்கிழமை மாலை 3- 30 இலிருந்து 7- 30PM வரை இந்த அமைப்பின் துவக்க விழாவும் அதோடு முதலாம் ஆண்டு ஈத் மிலன் சந்திப்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட்டு இந்நிகழ்வு ஏற்கனவே பெருநாள் தொழுகை நடந்த பாரிஸ் சமுதாய ஹாலில் நடைபெற இருக்கிறது.
பல பகுதியிலிருந்தும் வரும் மார்க்க அறிஞர்களின் சிறப்பு பயான்களுடன் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கான சுவாரஸ்யமான போட்டிகள் தனித்தனியே நடத்தப்படவும் முடிவில் உணவு பரிமாறப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு முன் கூட்டி திட்டமிட, வருகையாளர்கள் முன் கூட்டியே தங்கள் பெயர்களை அதிரையர்களான சகோதரர்கள் கா.மு.ரபீக், இம்தியாஸ் இவர்களிடமும் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
இங்ஙனம்
அல் ஹிதாயா முஸ்லிம் வெல்பர் அசோசியேசன்
குரைடன், லண்டன்,
தகவல் : லண்டனிலிருந்து மு.செ.மு. ஜஹபர் சாதிக்
தகவலுக்கு நன்றி.
ReplyDelete