.

Pages

Thursday, November 14, 2013

குமுதம் வார இதழில் வெளிவந்த அதிரையரின் கடியில்லா ஜோக் !

அதிரையின் மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர் அதிரை புஹாரி. இவர் 1977 ஆம் ஆண்டு பிரபல வார இதழான குமுதத்தில் தனது முதல் நகைச்சுவை துணுக்கு பிரசுரமானதிலிருந்து எழுத்தார்வத்தை வளர்த்துக்கொண்டவர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு பத்திரிக்கைகளில் குறிப்பாக குமுதம், ஆனந்த விகடன், தினத்தந்தி, துக்ளக், குங்குமம், பாக்கியா, கல்கி  போன்றவற்றிற்கு இவர் எழுதி அனுப்பும் பல்வேறு பல்சுவை துணுக்குகள் தொடர்ந்து பிரசுரமாகி வருவதால் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் எழுதி வருகிறார்.

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மூத்த மாணவர்களில் ஒருவரான இவர், இதுவரை 1000 த்துக்கும் மேற்பட்ட ஜோக்ஸ்களை எழுதியுள்ளதோடு, பிரபல தமிழ் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளவர். சிறந்த பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளார். இவர் சமீபத்தில் அதிரை நியூஸ் நடத்திய சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிந்தனையை தூண்டும் நகைச்சுவை உரையை நிகழ்த்தி அசத்தினார். சமிபத்தில் இவர் எழுதி அனுப்பிய ஜோக் ஒன்று இந்த வார குமுதத்தில் வெளியாகி உள்ளது.

3 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.