தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஆரோக்கியம் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் விழிப்புணர்வு பிரச்சார மினி மாரத்தான் ஓட்டம் இன்று மாலை 5 மணியளவில் தக்வா பள்ளியின் பிராதான சாலையிலிருந்து துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியா அமைப்பின் தஞ்சை [ தெற்கு ] மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்திக் சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட SDPI தஞ்சை [ தெற்கு ] மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ஓட்டம் பெரிய ஜும்மா பள்ளி, மரைக்கா பள்ளி, செக்கடி மேடு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், வண்டிபேட்டை, சேர்மன்வாடி வழியாக சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது.
முன்னதாக PFI அதிரை நகரத் தலைவர் அஹமது சலீம் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆரோக்கியமான முயற்சி வாழ்த்துக்கள் PFI.
ReplyDeleteபரிசுகள் ஒன்றும் அறிவிக்க வில்லை.