.

Pages

Sunday, March 31, 2013

மரண அறிவிப்பு [ மேலத்தெரு ]

அதிரை மேலத்தெருவைச் சார்ந்த  நாகூர் பிச்சை [ காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் அலுவலர் ]  அவர்களின் மகனும் முஹம்மது ஆரிப், அலி அக்பர், நவாஸ்கான் ஆகியோரின் சகோதரருமாகிய மொய்தீன் அவர்கள் இன்று [ 31-03-2013 ] துபாய் நாட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

அன்னாரின் ஜனாஸா குறித்து விவரம் விரைவில் தளத்தில் அறிவிப்பு செய்யப்படும் [ இன்ஷா அல்லாஹ் ! ]

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

அதிரையில் "ராயல் டைல்ஸ் பார்க்" நிறுவனம் விற்பனைக்கு !

அதிரை ஈசிஆர் சாலையில் தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள "ராயல் டைல்ஸ் பார்க்" என்ற நிறுவனம் விற்பனைக்கு உள்ளது. இங்கே கட்டிடங்களுக்கு தேவையான டைல்ஸ், மார்பில்ஸ், கடப்பா, டிசைன் ஓடு, ஆணையடிக்கல், பெயின்ட், ஆஸ்பட்டல் சீட், PVC டோர், சானிட்டர் வேர்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதிரையில் புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அன்பர்களுக்கு இவை நல்லதொரு வாய்ப்பாகவே அமையும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ள...

சகோ. முஹம்மத் யூனுஸ்
அலைப்பேசி :0091 9751959152 / 0091 9942324266 




ஏரிபுறக்கரை கிராமத்தில் புதிதாக வங்கி திறக்க வேண்டுகோள் !

அதிரை அருகே உள்ள மீனவ கிராமம் ஏரிபுறக்கரை. பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற இந்த பகுதியில் வங்கி இல்லாதது பெரும் குறையாகவே காணப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் சார்பாக இந்திய தேசிய காங்கிரசின் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமாகிய M.R. இராஜேந்திரன் அவர்கள் ஆட்சியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலகர்களுக்கு வேண்டுகோள் மனுவை அனுப்பி வைத்துள்ளார்.


துபையில் நடந்த அமீரக கீழத்தெரு மஹல்லா மாதாந்திரக்கூட்டம்.!










அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் நேற்று முன் தினம் 29/03/2013 வெள்ளிக்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சகோதரர் மீரான் ஹசனி கஹ்ராத் ஓத சிறப்புடன் ஆரம்பமானது.

நமது ஊர்,மற்றும் நமது மஹல்லா வாசிகள் நலன் கருதி நல்ல பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதில் சில முக்கிய கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன.

கூட்டத்தில் முன்வைத்து பேசப்பட்ட கோரிக்கைகளில்  முக்கியமானவைகள்.!


1, காட்டுப்பள்ளி அருகில் பெண்களுக்கென தனி சுகாதார வாளகம் [கழிப்பிடம்] கட்டியதை திறப்பதற்கான   முயற்ச்சி எடுப்பது பற்றி பேசப்பட்டன.

2, நமது தெருவாசிகளின் நலன் கருதி நமது தெருவுக்கென்று நுகர்பொருள் விநியோகத்திற்கான ரேசன் கடை அமைக்க தகுதியான இடம் விரைவில் பார்த்து அமைக்கப்படும்.

3, பெண்களுக்கென மார்க்க அறிவுரை சொற்ப்பொழிவுகள் நடத்த வசதியுடன் கூடியபொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்து விரைவில் செயல்படுத்துவது பற்றி பேசப்பட்டன.

4, மிக முக்கியமாக கீழத்தெரு மஹல்லா வாசிகள் நமது தெரு மாத சந்தாவை சரியாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. இன்னும் பல நல்ல திட்டங்களை நமது சார்பாக ஊருக்காகவும், நமது தெருக்காகவும் செய்து கொடுக்கலாம். அதில் அல்லாஹ் பரக்கத்தை வைத்திருக்கிறான்.

மற்றபல விசயங்கள் கலந்துரையாடலுக்குப்பின் சகோதரர் மீரான் ஹசனி துவா ஓத கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர் நன்றி கூற, கூட்டம் இனிதாய் முடிவுற்றன.

இப்படிக்கு,  
அமீரக கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள்

தொகுப்பு : அதிரை மெய்சா
thanks : adirai east

Saturday, March 30, 2013

திருத்துறைப்பூண்டி–அதிரை-பட்டுக்கோட்டை–காரைக்குடி ரெயில் பாதை திட்டப்பணிகள் குறித்து டி.ஆர்.பாலு ஆய்வு !

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் திருவாரூர்–திருத்துறைப்பூண்டி–திருக்குவளை, நாகை–திருத்துப்பூண்டி–பட்டுக்கோட்டை–காரைக்குடி, மன்னார்குடி–பட்டுக்கோட்டை, தஞ்சை–ஒரத்தநாடு–பட்டுக்கோட்டை ஆகிய புதிய ரெயில் பாதை கட்டுமான பணிகள் குறித்த ரெயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆய்வு நடத்தினார்.

அப்போது தென்னவன்நாடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்தின் நடுவே அமைக்கப்படவிருக்கும் ரெயில்வே வழித்தட பணிகளால் நூற்றுக்கணக்கான தனியார் கட்டிடங்களும், பொது சொத்துக்களும் சேதம் அடையும் என்பதால் மாற்று வழியாக இந்த திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட டி.ஆர்.பாலு, அங்கிருந்த அதிகாரிகளை உடனே தென்னவன்நாடு பகுதிக்கு சென்று ரெயில் திட்டத்தின் உத்தேச வரைவினை மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை செய்ய முடியுமா? என்பதை அப்பகுதி மக்களிடம் கலந்து பேசி உரிய முடிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி அதிகாரிகளும் கிராமமக்களுடன் கலந்து பேசி சரியான வழித்தடத்தை தேர்ந்தெடுத்தனர். ரெயில்வே தடத்தின் இறுதி வரைவு வடிவம் உருவாக்கிட ரெயில்வே துறை சம்மதித்துள்ளது. இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயம் அகற்றப்படாமல் இருக்க ரெயில்வே துறையின் திட்ட வரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை நல்லெண்ண அசம்பிளி ஆப் கார்ட் சபையை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜேக்கப்செல்வராஜ் தலைமையில் கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலித்து உரிய முடிவு மேற்கொள்வதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியின்போது ரெயில்வே துறையின் மூத்த அதிகாரிகளும், ஒரத்தநாடு மற்றும் தென்னவன்நாடு பகுதியைச் சேர்ந்த காந்தி, வடிவேல், ராம்குமார், வெங்கடேஸ்வரன், இளங்கோவன், ராகவன், பாலகணேசன், சுகுமாறன், குமார், கலியபெருமாள், ஆடிட்டர் ராமையன், ரெங்கராஜ், முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை ரெயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் அளித்தனர்.

நன்றி : தினத்தந்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் மாபெரும் கோரிக்கை பேரணி !

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்த மத்திய அரசையும், 3.5 சதவிதத்தை உயர்த்தி தர மாநில அரசை கேட்டுக்கொள்வது, பூரண மதுவிலக்கு அமல்படுத்துதல், நீண்டகால சிறைவாசிகளை விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பேரணி தஞ்சையில் நடைபெற உள்ளது. இந்த பேரணியில் கலந்துகொள்ள வேண்டி அதிரை கிளையின் சார்பாக அதன் நிர்வாகிகளால் அழைப்பு விடப்பட்டுள்ளது.

Friday, March 29, 2013

கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டம் !

சென்ற மாத அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டத்தில் இனி ஒவ்வொரு மஹல்லாஹ் பள்ளிவாசல்களிலும் மாதந்திரக் கூட்டத்தை நடத்துவது  என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து இன்று [ 29-03-2013 ] மாலை 4.30 மணியளவில் முதல் கூட்டமாக நமதூர் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் அதிரை பைத்துல்மாலின் தலைவர் ஹாஜி. ஜனாப் S. பரகத் அவர்கள் தலைமையில், கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகளின் முன்னிலையில், பைத்துல்மால் நிர்வாகிகளின் பங்களிப்போடு இனிதே துவங்கியது.

நிகழ்ச்சியின் நிரல் :

1. கிரா-அத் : ஹாஜி. ஜனாப் சிஹாப்துல்லா ( பொருளாளர்)  

2. வரவேற்புரை : ஹாஜி. ஜனாப் A.S. அப்துல் ஜலீல் (இணைச் செயலாளர்)

3. மாதாந்திர அறிக்கை வாசித்தல் : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது (செயலாளர்)

4. தெருவில் புழங்கும் சைக்கிள் வட்டியை படிப்படியாக குறைக்கும் நோக்கில் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 3000/- வரையிலான வட்டியில்லா சிறுதொகை கடன் திட்டத்தை கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகளின் பங்களிப்போடு அதிரை பைத்துல்மால் சார்பாக கடற்கரைத்தெரு மஹல்லாவில் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக முதல் முயற்சியாக ரூபாய் 20,000/-த்தை ஒதுக்குவது எனவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இவற்றை செயல்படுத்துவதற்காக கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகள் சகோ. அஹமது ஹாஜா, சாகுல் ஹமீது, சிராஜுதீன் ஆகியரோடு கடற்கரைத்தெரு மஹல்லாவைச் சார்ந்த அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் சகோ. இப்ராஹீம், அக்பர் ஹாஜியார் ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு [ 2013-2014 ]  முதல் அதிரை பைத்துல்மாலின் “உயர்க்கல்வி திட்டத்தை” அமல்படுத்துவது தொடர்பாக கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தினரிடம் ஒத்துழைப்பை கோரினார் அதிரை பைத்துல்மாலின் இணைச் செயலாளர் சகோ. A.S. அப்துல் ஜலீல் அவர்கள்.

6. நன்றியுரை : ஹாஜி. ஜனாப் S.K.M.ஹாஜா முஹைதீன் [ துணை தலைவர் ]

குறிப்பு : அடுத்த மாதாந்திரக்கூட்டம் நமதூர் தரகர்தெரு மஹல்லாவில் நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ]

அதிரை பேரூராட்சி தலைவரின் கருத்துக்கு த.மு.மு.க. வின் விளக்கம் [ காணொளி ] !


கடந்த [ 17-03-2013 ] அன்று அதிரை பேரூராட்சி சார்பாக செக்கடி மேடு அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தன. அதில் அதிரை பேரூராட்சி வார்டில் உள்ள செக்கடி குளம் அரசுக்கு சொந்தமானது என்றும், மேற்படி இடத்தில ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது என்றும், மீறினால் நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் என்றும், ஏற்கனவே கட்டி இருக்கக்கூடிய கட்டடங்களை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அன்றைய தினமே அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை  அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டன.

இதுகுறித்து அதிரை பேரூராட்சித் தலைவரின் தன்னிலை விளக்கத்தை கடந்த [ 26-03-2013 ] அன்று தளத்தில் வெளியிடப்பட்டன.

அதிரை பேரூராட்சி தலைவரின் கருத்து  தொடர்பாக த.மு.மு.க / ம.ம.க. - அதிரை கிளையின் தொழிற்சங்க செயலாளர் சகோ. A. நசுருதீன் அவர்களுடைய தன்னிலை விளக்கம்.

தற்கொலை சம்பவங்களுக்கு எதிராக அதிரையில் தவ்ஹீத் ஜமாத்தின் தெருமுனை பிராச்சாரம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கடந்த 28.03.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு  அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி அருகில் சமூகத்தில் அதிகரித்து வரும்  தற்கொலை சம்பவங்களுக்கு எதிராக விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.


இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களும், அதை ஒழிப்பதற்கான வழி முறைகளும் " என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்

தற்கொலை செய்தவர்களுக்கு இஸ்லாத்தில் கூறப்படுபவை என்ன ? என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் : சகோ. அப்துல் ரஹ்மான்

Thursday, March 28, 2013

கடற்கரைத்தெருவில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி !

கடும் மின் பற்றாக்குறை காரணமாக  அதிரையில் மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களில் மட்டும் 16 மணி நேரமாக இருந்து வருவது வேதனையாக உள்ளது.

முக்கிய நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால் பொதுமக்கள் மாத்திரமல்ல ஆண்டு இறுதித்தேர்வு எழுதும் / எழுத தயாராகும் மாணவ, மாணவிகள் மிகவும் அவதியுறும் நிலை ஏற்பட்டு உள்ளன. இதனால் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதோடு பொது மக்களின் அன்றாட பணிகளும் முடங்கிப் போயுள்ளன.
கடற்கரைத்தெருவில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் விநியோகத்தில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். இதையடுத்து கடற்கரைத்தெரு ஜமாத்தினர் அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம், துணைத்தலைவர் பிச்சை, வார்டு உறுப்பினர் KSA. சாகுல் ஹமீத் ஆகியோரை அழைத்து இந்தப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீராக வழங்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிரை தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் !

அதிரை நடுத்தெரு தக்வா பள்ளிவாசல் வக்ஃபிற்கு ஏழு புதிய டிரஸ்டிகள் நியமன ஒப்புதல் ஆணை தமிழ்நாடு வக்ஃபு வாரிய முதன்மை செயல் அலுவலரால் கடந்த 06-03-2013 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகள் மூன்று ஆண்டுகளுக்கு நிர்வாகிகளாக செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார பொருட்காட்சி !

வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பாக அதிரையில் மாபெரும் பொருட்காட்சி  வருகின்ற 28-04-2013 முதல் 12-05-2013 வரை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.



அதிரையில் வரலாற்றில் முதன் முறையாக அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து நடைபெற உள்ள இந்த மாபெரும் பொருட்காட்சி மூலம் நமதூர் மக்களிடையே புரிந்துணர்வும், பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும், வர்த்தக மேம்பாடு பெறுவதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக பொருட்காட்சியில் பங்குகொள்ள இருக்கின்ற வர்த்தக நிறுவனங்களிடேயே அரங்குகள் முன் பதிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Wednesday, March 27, 2013

சர்வதேச அமைப்பு 'கவியன்பன்' கலாம் அவர்களிடம் நடத்திய நேர்காணல் !

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு நமதூர் யாப்பில் மூத்த கவிகளில் ஒருவர் 'கவியன்பன்' , 'கவிக்குறள்' என இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால அன்புடன் அழைக்கப்படும் சகோ. அபுல் கலாம் பின் ஷேய்க் அப்துல் காதிர் அவர்களிடம் நடத்திய நேர்காணல் !

கவி உலகில் தனக்கென்று ஓர் இடத்தை படித்திருக்கும் அன்பான சகோதரர் கவியன்பன் கலாம் இலங்கை மக்கள் மனங்களில் நிழலாடும் இந்தியக் கவிஞர் இந்த அன்பான சகோதரன் என் கேள்விகளுக்குள் பதிலாக அமர்ந்து கொண்டார் அவரை அன்போடு வரவேற்கின்றேன்.

01. உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?உங்களைப் பற்றிக் கூறுங்கள் ?
இந்தியா என் தாய்நாடு; மாநிலம் தமிழ்நாடு;மாவட்டம் தஞ்சாவூர்; ஊர்:
அழகியகடற்கரைக் கிராமம் “அதிராம்பட்டினம்” ; என் வாப்பா 1957 வரை
உங்களின்இலங்கையில் - கொழும்பில் வணிகம் செய்தவர்கள்;பின்னர்
இனக்கலவரத்தால்இந்தியாவிற்குத் திரும்பி வந்து வணிகம் செய்தார்கள்.(இப்பொழுது என்சாச்சா மட்டும் குடும்பத்தோடு கொழும்பில் இருக்கின்றார்கள்) அதனாற்றான் எனக்கும் இயல்பாகவே இலங்கையர்கள் மீது அளவற்ற பிரியம் உண்டாகின்றது.நானும் வணிகவியலில் ஆர்வம் கொண்டவனாதலால் வணிகவியல் பட்டம் பெற்றவன்(பி,காம்) 1980 முதல் இன்று வரை அயல்நாட்டின் பிழைப்பில் வாழ்கிறேன்.எனக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் மருமகன்(மகளின் கணவர்) மற்றும் அழகும்அறிவும் நிறைந்த பெயரன்(மகள் வழி) அடங்கிய ஒரு சிறுகுடும்பம். என்னுடன் பிறந்தவர்கள் 2 அக்காள்கள், 2 தங்கைகள், ஓர் அண்ணன்,
ஒரு தம்பி. உம்மாஅவர்கள் இறந்து விட்டார்கள். வாப்பா அவர்கள்
இருக்கின்றார்கள்.

02. எழுத்து தொடக்கம் எப்படி தொடங்குகியது ?
1973ல் பள்ளியிறுதியாண்டில் “யாப்பிலக்கணம்” வகுப்பில் தமிழாசிரியர்நடத்திய விளக்கங்களால் ஈர்க்கப்பட்டு அன்றே ஒரு வெண்பாவை வனைந்தேன்.(இலக்கணம் என்றால் தலைக்கனக்கும் என்று கைப்புடன் மற்ற மாணவர்கள் எல்லாம்அவ்வகுப்பை அவதானிக்காத பொழுது யான் மட்டுமே அவ்வகுப்பில் மிகவும்ஈடுபாட்டுடன் இருந்ததை அவதானித்த என் தமிழாசான் புலவர் திரு. சண்முகனார்அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்) அன்று தொடக்கம் இன்று வரையாப்பிலக்கணமும்,
மரபுவழியும் என்னுயிராய் ஒட்டிக் கொண்டன. அவ்வாசானின் அறிவுறுத்தலுக்கிணங்க “நூலகமே என் உலகம்” என்று அவ்விளம்
வயதில்வாசிப்பில் நேசிப்பைக் கொண்டேன். குறிப்பாக, யாப்பின் வகைகளில்
எல்லாவகைப் பாடல்களையும் வனைய வேண்டும் என்ற பேரவா கொண்டேன். இடையில் பணிநிமித்தம் அயல்நாடுகள் (சவூதி, அமெரிக்கா, ஐக்கிய அரபுநாடுகள்)சென்றதால் எனக்கு இருந்த ஈடுபாடும் குன்றியது.

03. தமிழ் கவிதை தமிழ் மொழி இவைகளுடனான (ஒரு ஆசிரியர்) உங்கள் நெருக்கம்பற்றி சொல்லுங்கள் ?
முதலில் சொன்ன என் தமிழாசிரியர் மட்டுமல்ல, எங்களூரின்
தமிழறிஞரும்,எழுத்தாளரும், கவிஞருமான “அதிரை அஹ்மத் காக்கா” அவர்கள் என்னை மேலும்ஊக்கப்படுத்தினார்கள்; அவர்கள் என் வலைத்தளத்தில் வருகை புரிந்து ஒருபின்னூட்டம் எழுதினார்கள் இவ்வாறு:“இற்றைப் பொழுதினில் மரபுவழியினைப் பற்றிப் பிடித்தால் தமிழறிஞர்களின்பட்டியலில் இடம் பெறுவாய்” என்ற ஆசியுடன் வாழ்த்துரை அளித்தார்கள்; அன்றுமுதல் மீண்டும் யாப்பிலக்கணம் மேலும் கற்க அவர்களின் துணை நாடினேன்;மேலும், என் எழுத்தில் உண்டாகும் ஒற்றுப்பிழைகள்/ சந்திப்பிழைகள் கண்டுஅவற்றைத் திருத்தும் நல்லாசானாகவும் அவர்கள் விளங்குகின்றார்கள்.துபையில் ஒரு
கவியரங்கத்தில் இலங்கைக் காப்பியக்கோ ஜின்னா ஷரிஃபுத்தின்வாப்பா
அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்! அவர்களும் ,”என்னைப் போல்மரபு
வழிப் பாக்கள் படைப்பதில் கவியன்பன் கலாம் எனக்கு வாரிசாகஇருப்பார்”
என்று வாழ்த்துரை அளித்தார்கள்.இணையத்திலும், முகநூலிலும் எனக்கு
யாப்பிலக்கணம் கற்பிக்கும் ஆசானகளாக:கலைமாமணி இலந்தையார் (நியூ ஜெர்சி - “சந்த வசந்தம் இணையம்” நிறுவனர்)மற்றும் புதுவையில் வாழும் புலவர் இராஜ. தியாகராஜனார் ஆகியோரும் என்வழிகாட்டிகளாய் நின்று யாப்பின் எல்லா வகைப்பாக்களையும் இயற்றும் திறனைஎன்னிடம் வழங்கி வருகின்றார்கள்.

04. மரபுக்கவிதைகள் எழுதுவதிலும் நாட்டம் செலுத்துகிறீர்கள் புதுக்கவிதையும் எழுதி வருகின்றீர்கள் இதில் எதில் மன
திருப்திபெறுகின்றீர்கள் ?
உண்மைதான். முன்னர்ச் சொன்னபடி 1974 முதல்
மரபுப் பாவின்பால் நாட்டம்அதிகம் உண்டானது; இடையில் கவிப்பேரரசு
வைரமுத்து அவர்களின் “இதுவரை நான்”என்னும் கவிதைத் தொகுப்பைப் படித்தேன்; அதுவரை நான் மரபென்னும் கடலைவிட்டு, புதுமை என்னும் நதியில் நீராடத் துவங்கினேன். எளிமையாகஇருந்தாலும், என் மனம் மரபில் தான் மீண்டும் கலக்கின்றது; அதற்கு என்ஆசான்களின் ஆசிகற்றான் காரணியமாக அமையும் என்று நினைக்கிறேன். மரபுப்பாஇனிமை; புதுக்கவிதை என்பது புதுமை; துளிப்பா(ஹைகூ) எளிமை என்ற கண்ணோட்டமும் என்னிடம் உண்டு. புதுக்கவிதையில் ஓர் உணர்வின்
உயிரோசையைக்காண்கிறேன். அதனால் மூன்று வகையிலும் என்னால் இயற்ற முடியும்; நான் கவிதைஎழுதவில்லை; கவிதையாய் வாழ்கின்றேன்! தமிழே என் மூச்சு; கவிதையே என்பேச்சு !

05. முத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது
நேரடியாகவழிகாட்டகிறார்களா ?
ஆம். வாசிப்பில் நேசிப்பைக் கொண்டவன் என்பதாலும்,
படிப்பாளிதான்படைப்பாளியாக ஆக முடியும் என்பதும் என் வாழ்வின் ஆரம்பப்பள்ளிக்காலத்திலும் உணர்ந்தவன். நூலகமே என் உலகம் என்று வாழ்ந்தவன்; இன்று,இணையமே என் இருதயம் என்று வாழ்கிறேன்.”தாய்” வார இதழின் ஆசிரியர்-வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களின்எழுத்து நடையை வாசித்தேன்; புதுக்கவிதையை நேசித்தேன்என்றும் நான் போற்றும் கவிக்கோ அப்துற்றஹ்மான் அவர்களின் படைப்புகளைவாசிப்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவன்; அவர்களை நேரில் காணும் பேறுபெற்றவன்.என்றும் என் மானசீகக் குருவாகக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைமுன்னிறுத்திக் கொண்டு அவர்கள் எப்படி எல்லாம் உணர்வின் ஓசையுடன்கவிதைகளைப் படைக்கின்றார்கள் என்று அவர்களின் கவியரங்க விழிமங்களைத்தேடிக் கேட்கிறேன்.முன்னர்ச் சொன்ன, என் ஆசான்களின் படைப்புகளை நேராகப் பெற்றும், இணையம்வழியாக மின்மடலில் பெற்றும் வாசிக்கிறேன்;  அவர்களின் படைப்புகளில் எப்படி இலக்கணங்களைக் கையாள்கின்றனர் என்று உன்னிப்பாக அவதானிக்கிறேன்.

06. படிப்பிப்போடு எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா ?
இல்லவே இல்லை; இளமையில் கல் என்பது போல், இளமையில் எழுது என்று எனக்குள் ஏற்பட்ட ஓர் இனம் புரியாத பேரவா என்னுள் தீயாய் இருப்பதால் என்னால்எழுதுவதை ஒரு சிரமமாக நினைப்பதில்லை; ஆயினும், தற்பொழுது உடல்நிலைஒத்துக் கொள்ளாத நிலைமையைக் கண்டு என் துணைவியார் அவர்களும்,என்நண்பர்களும், என்னுடன் பணியாற்றும் மேலாளர்களும் என்னைக் கடிந்துகொள்கின்றனர் “ நீ எழுதுவதை நிறுத்தினால் உன் உடல் நலம் பெறும் ‘என்று.ஆனால், என் மனம் எழுத்திலும், கற்பதிலும், கற்பிப்பதிலும் தான் பேரின்பம்= அலாதியான ஓர் ஆன்மத் திருப்தியை அடைவதை உணர்கிறேன்; தேனின் இன்பம் என்பதைச் சுவைத்தவர்க்கு மட்டும் தான் தெரியும்; புரிய வைக்க இயலாது!

07. சமகால கவிதைகளை எப்படி வாசித்து வருகிறீர்கள் எப்படி இருக்கின்றன
எல்லாம் கவிதைகள் என்று வலம் வருகின்றன என்பதைத் தான் ஏற்க
மறுத்தாலும்,உணர்வின் ஓசை யாகவே ஒலிக்கின்ற அவ்வரிகள் கவிதையின்
தாக்கத்தைஏற்படுத்தத்தானே செய்கின்றன என்ற ஓர் உடன்பாட்டால் உளமேற்கும் நிலையில்உள்ளேன். ஆயினும், எந்த விதமான இசை/ஓசை நயமோ, எதுகை மோனை கூட இல்லாமல்,வரிகளை மடக்கி, மடக்கி எழுதி விட்டால் அதுவும் கவிதையாகும் என்ற ஓர் அவலநிலையைத் தான் என் மனமும் கவிதையின் உண்மையான ஆர்வலர்கள்/ பாவலர்கள்எல்லாரும் ஏறக மறுக்கின்றனர்.மரபுப்பாக்களை என் ஆசான் இலந்தையார் அவர்கள் நடத்தும் “சந்த வசந்தம்”என்னும் இணையத்திலும், புதுவைப் புலவர் இராஜ.தியாகராஜனார் அவர்களின்முகநூல் பக்கத்திலும்  வாசிக்கிறேன் புதுக்கவிதைகளைக் கவிஞர் கனடா புகாரி, கவிஞர் பொத்துவில்
அஸ்மின்,கவிஞர்பரங்கிப்பேட்டை இப்னுஹம்தூன், கவிஞர் குவைத் வித்யாசாகர், அதிரைகவிவேந்தர் சபீர் அபுசாருக்ஹ், முத்துப்பேட்டை கவியருவி மலிக்கா ஃபாருக்,கவிதாயினிஆச்சி தேனம்மை, கவிதாயினி வேதா இலங்காதிலகம் மற்றும் என்முகநூல் நண்பர்களின் படைப்புகள் வழியாகவும் தேடித் தேடி வாசிக்கிறேன்நவீனக் கவிதைகளைக் கவிஞர்கள் இத்ரீஸ், சிராஜ்டீன் சிறோ மற்றும் ஸமானின்கவிதைகளில் காண்கிறேன்ஹைகூ என்னும் துளிப்பாக்கள்: என் மின்மடல் தேடி வந்து விழுகின்றன;குறிப்பாக மதுரை இரா.இரவி. மற்றும் ரமேஷ் போன்ற ஹைகூ கவிஞர்களின் ஹைகூகவிதைகள் என் மின்மடலுக்கு நாடோறும்
வருகின்றன.; அவைகளை இரசித்துவாசிப்பேன்.

08. கவிதைக்கான இணைய தளங்கள் உங்கள் எழுத்திற்கு
எந்தளவில்உதவுகின்றன ?
கவிதைக்கான இணையத் தளங்களாகவே நான் தேடித் தேடி
\இரவெலாம் விழித்துஇணையத்தில் புகுந்து நுழைந்து அனைத்துக் கவிதை
விரும்பும் தமிழ்த்தளங்களிலும் என் படைப்புகளை வரவேற்கும் வண்ணம்
நெருங்கிய நட்பைவைத்துள்ளேன்: அவற்றுள் தமிழ்த்தோட்டம் தமிழ்மணம் நீடூர்சன்ஸ் முதுகுளத்தூர்டைம்ஸ் அய்மான் டைம்ஸ் அதிரைநிருபர் அதிரை எக்ஸ்பிரஸ் சமூக விழிப்புணர்வுப் பக்கங்கள் மற்றும் இலண்டன் தமிழ் வானொலியின் “பா முகம்”,முகநூலின் கவிதைக் குழுமங்கள்சங்கமம் தொலைக்காட்சி,துபைஅய்மான் சங்கம், அபுதபிபாரதி நட்புக்காக, அபுதபியு ஏ இத் தமிழ்ச் சங்கம்வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு,துபைதமிழர்ப் பண்பாட்டு நடுவண் கழகம், துபைதுபாய்த் தமிழர்ச்சங்கமம் ஆகிய தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள்/ கவியரங்குகளில் என் கவிதைகள் வரவேற்கப்பட்டுள்ளன. குறிப்பாக: வானலை வளர்தமிழ் என்னும் இலக்கிய
அமைப்பு மாதந்தோறும்நடத்தும் கவியரங்கில் ஒரு கவியரங்கில் என்னைத்
தலைமைக் கவிஞராய் அமரவைத்து 33 கவிஞர்களை என் “மரபுப்பாவில்” அவர்களின் திறன் கூறிக் கவிபாடஅழைக்கும் பெரும்பணியை அவ்வமைப்பின் அமைப்பாளர் உயர்திரு. காவிரிமைந்தன்அவர்கள் எனக்களித்து என்னை மதித்து அக்கவிஞர்கட்குச் சான்றிதழ்களும் என்மரபுப்பாவில் வடித்து என்னையும் மேடையில் பரிசும் சான்றிதழும் கொடுத்துமதிப்பளித்ததை என் வாழ்நாளில் மறக்கவியலாத ஓர் அரிய தருணம்.இப்படியாக என் கவிதைகளை நாடிக் கேட்பவர்கட்குத் தவறாமல் அனுப்புகிறேன். அவற்றுள்உங்களின் “தடாகம் இலக்கிய வட்டம்” சர்வதேச அளவில் புகழ்பெற்று என்கவிதையையும் ஏற்றுள்ளது என்பது யான் பெற்ற பேறென்பேன்!

09. புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும்
இடையிலான வேறுபாடு பற்றிகூறமுடியுமா ? கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள் ? 
புதுக்கவிதை எளிமையும் புதுமையும் கலந்த ஓர் உணர்வின்
வடிவம்;நவீனக் கவிதை “ஞானத் தேடல்” போன்று உளவியல் அறிவுடன்
உன்னிப்பாய்அவதானித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற ஓர் ஆழமான கடல் ! கவிதை என்பது கற்பவரின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தும்;கவிக்கோ அப்துற்றஹ்மானின் ஒரு கவிதையில்: அண்ணல்
நபி(ஸல்)அவர்களைத்தாயிஃப் மக்கள் கல்லால் அடித்தார்கள் என்ற செய்தியைக் கவிதையில்சொல்வார்கள் இப்படியாக:\\கல்லின் மீது பூவை
வீசியவர்கள்முதன்முதலாகபூவின் மீது கல்லை வீசினார்கள்!”மேலே சொன்ன விடயம் ஒன்றுதான் அதனை உரைநடையில் சொல்வதை விட இவ்வண்ணம்கவிநடையில் சொன்னால் உள்ளத்தில் உண்டாக்கும் தாக்கம் தான் கவிதை என்னும்ஆக்கம் தரும் நோக்கம்.

10. கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன ?
கவிதைகள் என்பதும் ஒரு கற்பித்தலே; கற்பித்தலால் என்ன சாதிக்க முடியுமோஅதனையே கவிதையிலும் சாதிக்கலாம். உதாரணமாக என் கவிதை “வயசு வந்து போச்சு”என்ற கவிதையில் வரதக்‌ஷணை என்னும் கொடுமையைச் சாடியிருந்தேன்; அந்தக்கவிதையைப் படித்த ஓர் அன்பர் ”வரதக்‌ஷணை வாங்காமல் திருமணம் முடிப்பேன்”என்று எனக்கு மின்மடலில் மறுமொழி அனுப்பியதும்; அதே கவிதையைக்கவியரங்கில் பாடிய பொழுது ஓர் இளம் மங்கைக் கண்ணீர் மல்க,”எப்படி ஐயாஎங்களின் உணர்வுகளை இப்படி வடித்தீர்கள்” என்று வினவியதும் என் கவிதையின் தாக்கம் என்று உணர்கிறேன் ! சமுதாயப் பிரச்சினைகள் என்னும் சமுத்திரப் பிரளயங்களை., நம் கவிதைகள்என்னும் சிரட்டையளவின் சிரத்தையால் தடுப்போம் என்பதே என் நிலைபாடு.

11. கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா ? நாவல்,
சிறுகதை என்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா
?
துவக்கத்தில் சிறுகதைகள் எழுதினேன்; அவைகள்
இதழாசிரியர்களால்ஏற்கப்படவில்லை; அதனால் நிறுத்தி விட்டேன்; ஆயினும், சிறுகதைகள்,நாவல்கள் மற்றும் இலக்கியத்தின் எல்லாப் பரிணாமங்களும் எனக்குவிருப்பமானவைகள் என்பதால் அவைகளையும்
வாசிப்பேன்;நேசிப்பேன்.12உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த
சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?ஆம். முதலில் சொன்னேன் அல்லவா. பணியின்
காரணியமாக உலகம் சுற்றியதால்என்னால் ஓரிடத்தில் உட்கார்ந்து எழுத இயலாமற் பணி ஒன்றே நோக்கமாக அமைந்துவிடுதல்;உடல்நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முதுமை மற்றும் நோய்கள்துணைவியார், நண்பர்கள், மேலாளர்களின் அன்பான அறிவுறுத்தல்கள்இவைகள் என் எழுத்துப் பயணத்தின் தடைக் கற்கள்!முன்னர்ப்பள்ளியிறுதி வகுப்புத் தேர்வு முடிந்ததும் (1973) தமிழின்பால்கொண்ட காதலால், “புலவர்” பட்டயம் படிக்க வேண்டும் என்ற பேரவாவினால்அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்த வேளையில், என் குடும்பத்தார்கூறினார்கள்: “ பாட்டுக் கட்டினால் நோட்டுக் கட்ட முடியாது” என்று.இயல்பாகவே வணிகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனாதலால்,“வணிகவியலை”பட்டப் படிப்பாக்கினேன்; இன்றும் வணிகவியலை இலவயமாகக்கற்பிக்கிறேன். என் வாழ்வில் இரு கண்கள்; கணக்குப்பதிவியலும்;கவிதையும்.கணக்குப் பதிவியல் (accountancy) என்
தொழில்கவிதையியல் = என் இலக்கிய எழில்

13. இறுதியாய் என்ன சொல்ல போகிறீகள் ?
கண்டது கற்கின் பண்டிதனாவான்படிப்பாளியே
படைப்பாளியாவான்கற்போம்;கற்பிப்போம்இலக்கியமென்னும் மடியில்
இளைப்பாறுவோம்; இருதயம் இந்தத் “தடாகத்தின்”தென்றலால் இன்பம் அடையும்!

14. படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலாவகமாக கையாள முடிகிறது  ?
படிக்கும் காலத்தில் பயிற்றுவிக்கும் நல்லாசான்கள் கிட்டியதன் அரும்பேறு
என்பேன்.

15. எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு
உள்ளது ?
படைப்பாளிகள் எல்லாரும் தன் அனுபவங்களைத் தான் பலவேறு
பரிணாமங்களுடன்இலக்கிய வடிவில் நமக்கு விருந்தாகப் படைத்து நம் அறிவுப்பசியாறவைக்கின்றார்கள். உணவில் வகைகளும், சுவைகளும் வேறுபடுகின்றன போலவே,இவர்களின் படைப்புகள் என்னும் இலக்கிய விருந்திலும் சுவைகளில்,உருவத்தில் வேறுபாடுகள் இருப்பினும் ஏற்புடையனவாகவே வலம்வருகின்றன என்பதே என் கண்ணோட்டம்.

பொறுமையோடு எனது கேள்விகளுக்கு அமைதியாக .நிதானமாக பதில் தந்த உங்களுக்கு என் இதயம் கசியும் நன்றித்துளிள்வாழ்க மன நிறைவோடு மகிழ்வோடு மன மகிழ்வோடு, நலமோடு வாழ்த்துக்கள்

நன்றி : 
பேட்டி : கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
இலங்கை அமைப்பாளர் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

WSC ஜூனியர் நடத்திய 11 ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி !

அதிரையில் WSC ஜூனியர் நடத்திய 11 ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.




நன்றி : WSC Junior Team

Tuesday, March 26, 2013

செக்கடிமேடு அறிவிப்பு பலகை தொடர்பாக பேரூராட்சித் தலைவரின் தன்னிலை விளக்கம் [ காணொளி ] !

கடந்த [ 17-03-2013 ] அன்று அதிரை பேரூராட்சி சார்பாக செக்கடி மேடு அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தன. அதில் அதிரை பேரூராட்சி வார்டில் உள்ள செக்கடி குளம் அரசுக்கு சொந்தமானது என்றும், மேற்படி இடத்தில ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது என்றும், மீறினால் நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் என்றும், ஏற்கனவே கட்டி இருக்கக்கூடிய கட்டடங்களை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அன்றைய தினமே அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை  அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டன.

இதுகுறித்து அதிரை பேரூராட்சித் தலைவரின் தன்னிலை விளக்கம் !

Monday, March 25, 2013

இருதய சிகிச்சைக்கு அனுப்பிய பணம் அதிரை பைத்துல்மால் / தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு !

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புச்சகோதரர்களே,

கடந்த [ 13-02-2013 ] அன்று "இருதய சிகிச்சை : அதிரைச்சிறுமிக்கு உதவிடுவீர்" என்ற தலைப்பில் நமதூர் வலைதளங்கள் மூலம் உதவி கோரப்பட்டது. இருதய சிகிச்சைக்குரிய உதவிகள் நேரடியாக செல்லும் வகையில் சகோ. S.A. அப்துல் மஜீத் அவர்களின் தொடர்பு எண்ணும், வங்கி விவரமும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் ஒரு சில சகோதரர்கள் மூலம் வந்தடைந்த ரூபாய் 35,000/- மும், சகோ. S.A. அப்துல் மஜீத் அவர்கள் வசம் இருந்தன. இறைவனின் நாட்டம் மாற்றமாக அமைந்துவிட்டதால் இவற்றை குழந்தையின் சிகிச்சைக்காக பயன்படுத்தும் சூழல் அமையவில்லை.
இதற்கிடையில் ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் அதிரை சகோதரர் ஒருவர் தான் அனுப்பிருந்த ரூபாய் 10,000/- த்தை அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமானப்பணிக்காக கொடுத்துவிடும்படி சகோ. S.A. அப்துல் மஜீத் அவர்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டதால், அந்தப்பணம் தவ்ஹீத் ஜமாத் பள்ளியின் நிர்வாகிகள் வசம் கடந்த [ 22-03-2013 ] அன்று ஒப்படைக்கப்பட்டது.

மீதமுள்ள ரூபாய் 25,000/-த்தை மருத்துவ உதவிக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அதிரை பைத்துல்மால் வசம் இன்று [ 25-03-2013 ] ஒப்படைக்கப்பட்டது.


இந்தப்பணத்தை சிறுநீரகக் கோளாறால் உடல் நிலை பாதிப்படைந்திருக்கும் பழஞ்செட்டித்தெருவைச் சார்ந்த ஏழைச்சிறுவன் ஒருவனின் மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் உத்தேசித்துள்ளனர் [ இன்ஷா அல்லாஹ் ]  விரைவில் இதுகுறித்த அறிவிப்பு தளத்தில் வெளியிடப்படும்.

உதவிகள் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக !

அதிரை நியூஸ் குழு

மரண அறிவிப்பு [ மேலத்தெரு ]



மேலத்தெருவைச் சார்ந்த  மர்ஹும் சேக் ஜலாலுதீன் அவர்களின் மகளும் இம்ரான்கான், சலீம் ஆகியோரின் சகோதரியும், சேக்தாவூது அவர்களின் மனைவியுமாகிய நபிளா பேகம் அவர்கள் நேற்று [ 24-03-2013 ] காலமாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

அன்னாரின் ஜனாஸா நேற்று [ 24-03-2013 ] பகல் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

நன்றி : TIYA

Sunday, March 24, 2013

அமீரக தரகர் தெரு மஹல்லா ஒருங்கினைப்புக் கூட்டம்




அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

21.03.2013 வியாழன் இரவு அமீரக AAMF வின் நிர்வாகிகள் முன்னிலையில் A.A.M.F.வின் செயலாளர் V.T. அஜ்மல்கான் அவர்கள் ரூமில் இனிதே நடைபெற்றது. இந்த அமர்விற்கு அமீரக AAMF வின் துனைத்தலைவர் P.S.இஸ்மாயில் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தரகர்தெரு முஹல்லாவாசிகள் கலந்துக் கொண்டு நடைபெற்ற விவாத்தின் முடிவில் தரகர் தெரு மஹல்லாவின் நலனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கினைந்து செயல்பட வேண்டுமென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1
அடுத்த மாதாந்திரக் கூட்டம் ராஜா முகமது அவர்கள் ரூமில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 2
அமீரகத்தில் வசிக்கும் தரகர் தெரு மஹல்லாவாசிகள் அனைவரையும் நமது மஹல்லாவின் நலனுக்காக நேரில் சென்று சந்திப்பதற்க்கு கீழ்க்காணும் சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

1. மஸ்தான் கனி
2. மக்தூம்நெய்னா
3. பிஸ்மில்லாக்கான்
4. ராஜா முகமது

இக்கூட்டதில் கலந்து கொண்ட சகோதரர்கள் :

1. சீனியப்பா
2. அஸ்லம்
3. தாவூதுகனி
4. முகைதீன்
5. பிஸ்மில்லாக்கான்
6. மக்தூம் நெய்னா
7. மஸ்தான் கனி
8. ராஜா முஹமது
9. ஹலிபுல்லா
10. அப்துல் நஸிர்
11. ராஜிக் அஹமது
12. ரபிக் அஹமது
13. அயூப்கான்













நன்றி : TIYA