.

Pages

Friday, March 15, 2013

தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்க அழைப்பு !

தாட்கோ மூலம் கீழ்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் இன்று [ 15-03-2013 ] வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30–ந்தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்படுத்துதல், தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம் [ 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு மட்டும் ], மருத்துவமனை அமைத்தல் [ எம்.பி.பி.எஸ்., பி.எஸ்.எம்.எஸ், பி.டி.எஸ்., பி.பி.டி, பட்டம் பெற்றவர்களுக்கு ], பெட்ரோல், டீசல், கியாஸ் சில்லறை விற்பனை நிலையம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி, துரித மின் இணைப்பு திட்டம், விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதி உதவி போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக 18 வயது நிரம்பியவராகவும், 55 வயதிற்குள் உள்ளவராக இருத்தல் வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் ஆகும். சிறப்பு திட்டமான பெட்ரோல், டீசல், கியாஸ் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் http://application.tahdco என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். அது போல் திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும், அதற்கான இடத்தில் குறிப்பிட வேண்டும்.

தேதியுடன் பெறப்பட்ட விலைப்புள்ளி பட்டியல், டின் நம்பர், வாகனக்கடனுக்கு பேட்ஜூடன் கூடிய ஓட்டுனர் உரிமம் எண் தேதி ஆகியவற்றையும் அதற்கான உரிய இடத்தில் பதிய வேண்டும். புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மின் பகிர்மான அட்டை எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிடப்பட வேண்டும்.

3 comments:

  1. பயனுள்ள தகவல். பதிந்தமைக்கு நன்றி.

    ///மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். ///

    இச்சலுகை அனைத்து தரப்பு நலிந்தொர்களுக்கும் கிடைத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    பயனுள்ள தகவல்.

    இறைவன் படைப்பில் அனைவரும் சமம். ஆனால் திட்டங்கள் அனைவரையும் பிரித்து காண்பிக்கிறது வேதனைக்குரியது.

    எல்லோரும் எல்லாமும் எப்போ பெறுவது?

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல். பதிந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.