.

Pages

Sunday, March 10, 2013

அதிரையில் இலவச சைனஸ் மருத்துவ முகாம் !

அதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் ராயல் பேர்ல் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச சைனஸ் பரிசோதனை முகாம் நமதூர் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் இன்று [ 10-03-2013] காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்றது.

டாக்டர் T.N. ஜானகிராம் M.S. D.L.O., அவர்களின் தலைமையில் மருத்துவ குழுவினர் மூக்கடைப்பு, சைனஸ் தலைவலி, அடிக்கடி தும்மல் உள்ளிட்ட நோய்களில் பாதிப்படைந்தோருக்கு  பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் அப்துல் ஹமீத், முஹம்மது மொய்தீன், முனைவர் மேஜர் கணபதி, பேராசிரியர் கா. செய்யது அகமது கபீர், அஹமது, சாகுல் ஹமீத், தமீம் அன்சாரி, கனகசபை உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.

அதிரை மற்றும் அதனை சுற்றி வசிக்கக்கூடிய ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

5 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.