.

Pages

Friday, March 29, 2013

தற்கொலை சம்பவங்களுக்கு எதிராக அதிரையில் தவ்ஹீத் ஜமாத்தின் தெருமுனை பிராச்சாரம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கடந்த 28.03.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு  அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளி அருகில் சமூகத்தில் அதிகரித்து வரும்  தற்கொலை சம்பவங்களுக்கு எதிராக விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.


இதில் அதிரை கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்களும், அதை ஒழிப்பதற்கான வழி முறைகளும் " என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்

தற்கொலை செய்தவர்களுக்கு இஸ்லாத்தில் கூறப்படுபவை என்ன ? என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் : சகோ. அப்துல் ரஹ்மான்

1 comment:

  1. தற்கொலையின் பின் விளைவுகள் பற்றி அவசியம் மக்களுக்கு அவசியம் எடுத்து சொல்ல வேண்டும்.

    பிரச்சனைகள் தீர தற்கொலை ஒரு நல்ல தீர்வாகுமா..? என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு பகுதியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். வரும் திங்கள் அன்று பதிவில் வரும் பாருங்கள். nijampage.blogspot.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.