.

Pages

Thursday, March 14, 2013

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு முகவராக பணியாற்ற அழைப்பு !

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 30.11.1978 முதல் தொடர்ச்சியாக ஏராளமான தொழிலாளர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றோரை நல்ல ஊதியத்தில் பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது. 

மேலும் அதிக அளவில் வேலை நாடுவோரை வெளிநாட்டில் பணியமர்த்தும் விதமாக இந்நிறுவனம் சார்பில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வேலையளிப்பவரை தொடர்பு கொண்டு உரிய வேலைவாய்ப்புகளை சேகரிக்கும் முகவர்களை அயல்நாட்டில் நியமிக்க இந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

ஏனவே தகுதியுள்ள வெளிநாட்டு வேலையளிப்போரை பரிந்துரைக்கும் முகவராக பணியாற்றிட விரும்பும் வெளிநாட்டிலுள்ள அனுபவமுள்ள முகவர்கள், தங்களின் சுயவிவரங்கள், கடந்த கால செயல்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளடக்கிய விண்ணப்படிவத்தினை முத்திரையிட்ட உறையில்...

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் [ தமிழக அரசு நிறுவனம் ],
அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்,
எண் 42, திரு.வி.க. தொழிற்பேட்டை, ஆலந்துர் ரோடு,
கிண்டி, சென்னை 600032

என்ற முகவரிக்கு 19.03.2013க்குள் அனுப்புமாறும் மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com  என்ற வலைதளத்திற்கு வருகைபுரியும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

5 comments:

  1. Email subscription ஆகலே கொஞ்சம் பாருங்க எடிட்டரே...

    ReplyDelete
    Replies
    1. // Email subscription ஆகலே கொஞ்சம் பாருங்க எடிட்டரே...//

      சரி செய்யப்பட்டுள்ளது. எங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி !

      Delete
  2. பயனுள்ள பதிவு.

    அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல தகவல் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.