.

Pages

Friday, March 1, 2013

அதிரை பிலால் நகரில் ADT யின் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !

இன்று [ 01.03.2013 ] மாலை 5.30 மணியளவில் அதிரை பிலால் நகரில் முதன் முதலாக அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பாக மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ADT யின் அங்கமான இஸ்லாமிய பயிற்சி மையம் [ ITC ] அருகே நடைபெற்றது.
கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர்.



பொதுக்கூட்டத்திற்கு ADT யின் தலைவர் 'தமிழ் அறிஞர்' அதிரை அஹமத் B.A.  அவர்கள்  தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார் 

'மருமைச் சிந்தனை' என்ற தலைப்பில் முதன்மை உரை நிகழ்த்தினார் மவ்லவி அப்துல் காதிர் மன்பயீ அவர்கள்.

ADT யின் செயலாளர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள் ADT உருவான வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த JAQHன் மாநில துணைத்தலைவர் சகோ. கோவை அய்யூப் அவர்கள் 'படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்குத் தேவை' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தின் இறுதியில் ADT யின் துணைத்தலைவர் சகோ. B. ஜமாலுத்தீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். 

பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பெண்களுக்கு என வாகன வசதிகளும், தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதிரை காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

14 comments:

  1. பித்அத், சிர்க் போன்றவற்றை ADT யின் பொதுக்கூட்டத்தில் விரிவாக உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்த்து சென்றிருந்தோம். ஆனால் நமக்கு ஏமாற்றம்தான் பிறகுதான் அடுத்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டேன் இவர்கள் பித்அத் களை எதிர்த்து பேசுவதில் சில தர்ம சங்கடங்கள் இருக்கிறது. அதன் தலைவராக இருக்கட்டு மற்ற நிர்வாகிகளாக இருக்கட்டும் மௌலுது ஓதும் பள்ளியிலும் , சங்கங்களிலும் (பதவி ஆசைக்காக) நிர்வாகிகளாகவும் அந்த பள்ளிகளில் தொழுவராக இருக்கிறார்கள் என்று பின்னர்தான் தெரிந்துக்கொண்டேன். இது தப்லீக் ஜமாஅத் பொதுக்கூட்டம் போல் இருந்தது.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி புகைப்படம் அருமை.

    ReplyDelete
  3. நடுநிசி நேரம் வரை நல்லதொரு உரையைக் கேட்க வைத்த ஏற்பாட்டாளர்கட்கும், இக்கூட்டம் நடைபெறுவதற்குப் பொருளாதாரம் மற்றும் உடலுழைப்பு நல்கிய எல்லார்க்கும், நேரலையில் வழங்கிய அதிரை வலைத்தளங்களின் நிர்வாகத்திற்கும் உளம்நிறைவான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

    ReplyDelete
  4. இக்கூட்டம் நடைபெறுவதற்குப் பொருளாதாரம் மற்றும் உடலுழைப்பு நல்கிய எல்லார்க்கும், நேரலையில் வழங்கிய அதிரை வலைத்தளங்களின் நிர்வாகத்திற்கும் உளம்நிறைவான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    நடுநிசி நேரம் வரை நல்லதொரு உரையைக் கேட்க வைத்த ஏற்பாட்டாளர்கட்கும், இக்கூட்டம் நடைபெறுவதற்குப் பொருளாதாரம் மற்றும் உடலுழைப்பு நல்கிய எல்லார்க்கும், நேரலையில் வழங்கிய அதிரை வலைத்தளங்களின் நிர்வாகத்திற்கும் உளம்நிறைவான நன்றி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  6. அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் ....
    தமிழகத்தில் ஷிர்க்கையும் பித்அத்தையும் அல்லாஹுக்கு மட்டும் பயந்து துனிச்சலுடன் எடுத்து சொல்லும் இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே!

    ReplyDelete
  7. பிரச்சாரம் என்ற பெயரில் மக்கள் மீது பாய்ந்து பிராண்டுவது ஒருவகை என்றால் இன்னொரு வகை மக்களை சிந்திக்க தூண்டுவது, தோழமையோடு பேசி சீர்படுத்துவது. அந்த வகையில் இந்த கூட்டம் இரண்டாம் வகை, மேலும் மனித நாகரீகம் தெரிந்தவர்களால் நடத்தப்பட்டது.

    அதிரை அமீன் அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும்
      அன்பு சகோதரர் அமீன் அவர்களுக்கு
      //பிரச்சாரம் என்ற பெயரில் மக்கள் மீது பாய்ந்து பிராண்டுவது ஒருவகை// இது யார் யாரை பிராண்டியது என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும் ஏனெனில் இதற்கு முன்பு நான் கடற்கரை தெருவில் நடந்த தர்கா இறப்பு சம்பந்தமான கேள்விக்கு பதில் சொல்ல்கிறேன் என்று நீ அப்போ பிறந்து இருக்க மாட்டாய் என்று பதில் வந்தது .இதற்கு பெயர் தான் பிராண்டுவது என்று எல்லோருக்கும் தெரியும் .
      //இன்னொரு வகை மக்களை சிந்திக்க தூண்டுவது, தோழமையோடு பேசி சீர்படுத்துவது//

      தோழமையோடு பேசி சீர்படுத்துவது பித் அத பற்றி பேசாமல் நானும் பயான் பண்ணுகிறேன் பார்த்து கொள்ளுங்கள்,என்ற வகையில் மேலோட்டமாக தப்லீக் ஜமாஅத் கூட்டம் போல நடத்தி விட்டு அவளை நினைத்து உரலை இடித்துள்ளீர்கள்.

      //மேலும் மனித நாகரீகம் தெரிந்தவர்களால் நடத்தப்பட்டது.//
      மார்க்க பயான் பண்ண நாகரீகத்துடன் மார்க்கமும் தெரிய வேண்டும்

      Delete
  8. பாக்கரை அழைக்கவில்லையா ஐஎன்டீஜே அமீன் அவர்களே?

    அதான் பாக்கரின் மன்மத ஜமாஅத்தில் அப்துர் காதர் மன்பையை அழைத்துவிட்டோம் என்கிறீர்களா? அதுவும் சரிதான். இருவர் மன்மத இயக்க ஆதரவாளர்கள், ஒருவர் வரதட்சணை திருமணத்தை நடத்தி வைக்கும் சங்கத்தின் தலைவர், மற்றவர்கள் சிர்க் வைக்க கூடியவர்களை பின்பற்றி தொழும் தவ்ஹீத்வாதிகள். அனைவரும் வரதட்சணை சாப்பாட்டை பிரித்து மேய்பவர்கள்.

    கோவை அய்யுபிற்கு பயான் செய்ய என்ன தகுதியிருக்கிறது. மறுமை புகழ் கோவை அய்யுபால் திருமணம் செய்யப்பட்டு கைவிடப்பட்டவர்கள் எத்தனை பெண்கள் தெரியுமா? கோவை அய்யுப் எல்லாம் சரியில்லதவர்கள் என்று நீங்கள் தானே ஊரில் சொல்லி திரிந்தீர்கள்?

    இவர்கள் வரதட்சணை, ஷிர்க பற்றியெல்லாம் பேசினால் கண்ணாடியை பார்த்து தான் பேச வேண்டும்.

    பாக்கர் இயக்கத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் ஜமாலுதீன்.

    நாகரீகமாக பேசும் அதிரை அமீன் வகையாறாக்கள் தக்வா பள்ளி அருகில் பாக்கர், செங்கி போன்றவர்களை அழைத்து வந்து பிஜேவை அநாகரீகமாக அவரின் குடும்பத்தை கூட விடாமல் பேசினார்கள். தங்களுக்கு பாக்கரும் எந்த தொடர்பு இல்லை தானே?

    ReplyDelete
  9. ithuthaan unga 2nilaiya?. Appadi enraal munnadi neengal makkalai paainthu piraanduneerhala, ithai yen neengal munbu sollavillai. Makkalai sinthika thoonda vaithu neengal mangi poai vidatheerhal.

    ReplyDelete
  10. //பிரச்சாரம் என்ற பெயரில் மக்கள் மீது பாய்ந்து பிராண்டுவது ஒருவகை என்றால் இன்னொரு வகை மக்களை சிந்திக்க தூண்டுவது, தோழமையோடு பேசி சீர்படுத்துவது. .//

    இப்பொழுது தவ்ஹீத் ஜமாஅத் எப்படி பிரச்சாரம் செய்கிறதோ அதுபோல் தான் நீங்கள் இருக்கும் போதும் செய்தது. இந்த குற்றச்சாட்டை சொல்லி நீங்கள் வெளியேறவில்லை உங்களை வெளியேற்றிய பின்பு இந்த குற்றச்சாட்டை நீங்கள் வைக்கலாமா?

    நீங்கள் நடத்தும் ஏ எல் எம் பள்ளியில் ஜீம்ஆ பயான் செய்வதற்கு ஒரே தகுதி பி ஜே யை திட்டுவது யாராக இருந்தாலும் எந்த கொள்கையில் இருந்தாலும் அவர்களை ஏற்றுவது என்ற கொள்கையில் உள்ள நீங்கள் இதை சொல்வதற்கு தகுதியானவரா

    //மனித நாகரீகம் தெரிந்தவர்களால் நடத்தப்பட்டது//
    நீங்கள் சொல்வது உண்மைதான் பித்அத், சிர்க் ஆதரிப்பவர்களையும், அது நடக்கும் பள்ளிகளில், சங்கங்களில் நிர்வாகிகாக உள்ளவர்களை மேடையில் வைத்துக்கொண்டும் விமர்ச்சனம் செய்வது நாகரீகம் இல்லைதான்


    ReplyDelete
  11. //நாகரீகமாக பேசும் அதிரை அமீன் வகையாறாக்கள் தக்வா பள்ளி அருகில் பாக்கர், செங்கி போன்றவர்களை அழைத்து வந்து பிஜேவை அநாகரீகமாக அவரின் குடும்பத்தை கூட விடாமல் பேசினார்கள்//

    இதற்கு பெயர் தான் அவர்களின் நாகரீகம் .தவ்ஹீத் ஜமாத்தை,பிஜே வை யாரெல்லாம் திட்டுவார்களோ அவர்களுடன் கை கோர்த்தால் அதற்கு பெயர் ஒற்றுமை எனும் கயிறு .இங்கு கூட அல்லாஹ்வின் கயிறு என்று சொல்ல மாட்டார்கள் .ஒற்றுமை என்னும் கயிறு என்று சொல்வார்கள்

    ReplyDelete
  12. //பிரச்சாரம் என்ற பெயரில் மக்கள் மீது பாய்ந்து பிராண்டுவது ஒருவகை என்றால் இன்னொரு வகை மக்களை சிந்திக்க தூண்டுவது, தோழமையோடு பேசி சீர்படுத்துவது. அந்த வகையில் இந்த கூட்டம் இரண்டாம் வகை, மேலும் மனித நாகரீகம் தெரிந்தவர்களால் நடத்தப்பட்டது.//

    அமீன் காக்கா அவர்கள் செங்கிஸ்கானையும், அவர்களுக்கு மேடை அமைத்துக்கொடுத்தவர்களை மனதில் வைத்து சொல்லிருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. பாக்கர் மீது தொடர்ந்து வந்த பாலியல் புகார்கள் விசாரிக்கப்பட்டு, அது உண்மை என்று நிரூபணம் ஆன பின், பாக்கரை தவ்ஹீத் ஜமாஅத் தூக்கிவிசியது. அந்த நேரத்தில் அண்ணண் அமீன் அவர்கள் பாக்கர் ஆதரவாக (நடுநிலை வேஷம் போட்டு) பிஜேவிற்கு கடிதம் எழுதினார். பிஜேவும் பதில் கொடுத்து வந்தார், பின்னர் அமீன் அவர்களின் கல்ல நோக்கத்தை புரிந்த பிஜே அவர்கள், இனிமேல் நீங்கள் எனக்கு எந்த கடிதமும் எழுத வேண்டாம் என்று முகத்தில் அடித்தார் பிஜே. அண்ணண் அமீன் அவர்கள் பாக்கருக்கு ஆதரவாக எழுதிய கடிதத்தை வைத்துதான் பாக்கர் அனுதாபம் தேடினார்.

    பாக்கருக்கும் அமீன் அவர்களுக்கும் கள்ள தொடர்பு உண்டு. வெளியில் சொல்ல வெட்கம் அவ்வளவு தான். அண்ணண் அமீன் அவர்கள் பாக்கரின் கொள்கையால் (என்ன கொள்கைனு கேட்டால் சொல்லுவோன்) கவரப்பட்டவர்.

    நாகரிகம் பற்றி பேசாமல், நாகரிகமாக திண்டுகல்லுக்கும் கோவில்பட்டிக்கும் டிக்கேட் போட்டு கொடுங்க தலைவர் ஒரு பெண்ணுடன் ஒட்டி உரசி சென்று வரட்டும். வந்த பின் குர்ஆன் ஹதீஸ் தப்பானு கேட்பார். அண்ணண் அமீன் சொல்லுவர் நீங்கள் செய்தது தான் குர்ஆன் ஹதீஸின் போதனை என்பார்.

    நாகரிகம் பற்றி பின்னர் பேசலாம், உங்களுக்கு மானம் இருக்கிறாதா என்று சோதனை செய்து பாருங்க

    உங்கள் தலைவர் சொல்லுவதை கேட்டு அதை செயல்படுத்துங்க பாஸ்
    http://www.adiraitntj.com/2013/02/blog-post_6703.html

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.