.

Pages

Monday, March 4, 2013

லேப்டாப் கேட்டு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் !

இன்று [ 04-03-2013 ] காலை 9.45 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மாணவர்கள் லேப்டாப் வழங்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் மொத்தம் 566 மாணாக்கர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பாதிப்படைந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த அதிரை காவல்துறையினர் மாணவர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். சமாதான முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டன. 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாட்டாட்சியர் அவர்கள், இதுகுறித்து அரசின் கவனத்துக்கு உடனே எடுத்துச்செல்கின்றோம் என சொல்லியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு லேப்டாப் பெற்றுத்தர அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



8 comments:

  1. மாணவர்களே "செம டாப்" "லேப் டாப்" க்கு நடத்திய சாலை மறியல்

    இன்ஷா அல்லாஹ் நல் முயற்சிக்கு கிடைக்கும் "வெற்றி" நிச்சயம்,

    பொறுத்திருந்து பார்போம் அரசின் கவனத்திற்கு செல்லுமா அல்லது பாதிவழியில் மறந்திடுமா என்று

    ReplyDelete
  2. மாணவர்களின் நியாமான கோரிக்கை !

    இறுதியாண்டு படிக்கும் நீங்கள் இன்னும் சில வாரங்களே வகுப்புகள் நடைபெற உள்ள நிலையில், சரியான நேரத்தில் அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்றுக்கின்றீர்கள்.

    உங்களின் கோரிக்கை வெற்றிபெற வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. எல்லா ஊர்களிலும் லேப் டாப் வழங்கி முடிந்த நிலையில் நமதூர் மாணவர்களுக்கு மட்டும் இன்னும் வழங்காததன் காரணம் என்ன.?

    என்ன செய்வது போராட்டம் செய்தே அனைத்து சலுகைகளையும் பெற வேண்டியதாக உள்ளது.

    இதை கல்லூரி நிர்வாகம் அரசுக்கு எடுத்துச்சொல்லி மாணவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    மடிக்கணினி அவசியம் தான் ஆனால் அதற்க்கு மின்சாரமும் அவசியம் மாணவர்களே.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    மடிக்கணினி அவசியம் தான் ஆனால் அதற்க்கு மின்சாரமும் அவசியம் மாணவர்களே. எல்லா ஊர்களிலும் லேப் டாப் வழங்கி முடிந்த நிலையில் நமதூர் மாணவர்களுக்கு மட்டும் இன்னும் வழங்காததன் காரணம் என்ன.?

    ReplyDelete
  6. சரியான நேரத்தில் அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்றுக்கின்றீர்கள், உங்களின் கோரிக்கை வெற்றிபெற வாழ்த்துகள்...

    ReplyDelete

  7. மடிக்கணினி அவசியம் தான் ஆனால் அதற்க்கு மின்சாரமும் அவசியம் மாணவர்களே. எல்லா ஊர்களிலும் லேப் டாப் வழங்கி முடிந்த நிலையில் நமதூர் மாணவர்களுக்கு மட்டும் இன்னும் வழங்காததன் காரணம் என்ன.?

    ReplyDelete
  8. \\மடிக்கணினி அவசியம் தான் ஆனால் அதற்க்கு மின்சாரமும் அவசியம் மாணவர்களே.//

    சரியான கேள்வி

    ஆனால் அரசு தரும் இந்த லேப்டாப் மட்டும் தனி சிறப்பு 7,8 மணி நேரம் பேட்டரி அப்படியே நிக்கிதாமுலே மற்ற லேப்டாப்பை கம்பேர் பண்ணின இது சூப்பர் தானே காக்கா

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.