.

Pages

Thursday, March 7, 2013

[ 2 ] குழந்தை வளர்ப்பு எவ்வாறு இருக்க வேண்டும் ?



குழந்தைகள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை சரியான உணவுதான என அறிந்து கொடுப்பது பெற்றோர்களின் கடமையாகிறது. சரி  இப்போது குழந்தைகள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று நிபுணர்கள் ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு உங்களது குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சரியான நேரம்,
குழந்தைகளுக்கு எப்போதும் சரியான நேரத்தில் உணவைக் கொடுக்க வேண்டும். அதிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 6-7 முறையாவது சரியான இடைவெளியில் சாப்பிடுவதற்கு கொடுக்க வேண்டும்.

ஒரே உணவு,
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, அதிகமான வெரைட்டியாக உணவுகளை கொடுக்க வேண்டாம். உண்ணும் நேரம் ஒரு உணவை மட்டும் கொடுத்து பழக்க வேண்டும். மேலும் அவ்வாறு கொடுக்கும் போது, நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

ஜன்க் உணவுகள், 
உணவுகளை கொடுக்கும் போது, உப்பு அதிகம் உள்ள உணவையோ, எண்ணெயில் பொரித்த உணவுகளையோ அல்லது ஜன்க் உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பானங்கள்,
குடிப்பதற்கு ஏதேனும் ஜூஸ் கேட்டால், அப்போது கார்போனேட்டட் பானங்களை கொடுப்பதற்கு பதிலாக, பழங்களால் செய்யப்பட்ட ஜூஸ் கொடுப்பது நல்லது.

போர் அடிக்க கூடாது,
குழந்தைகள் சாப்பிடும் போது, அவர்களுக்கு போர் அடிக்காத வகையில், அவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிட வைக்க வேண்டும். இதனால் அவர்கள் அதனை கவனித்துக் கொண்டே சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

கண்டிக்கவோ தண்டிக்கவோ கூடாது
குழந்தைகள் சாப்பிடும் போது கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோ கூடாது ஏனென்றால் அங்கேதான் அவர்களது பிடிவாதம் சாப்பாட்டிலிருந்து தொடங்கி அவர்களது அணைத்து பழக்க வழக்கங்களிலும் தொடர்ந்து இறுதியாக அவர்களது எதிர்காலமே கேள்விகுரியாகிறது.  

ஆரோக்கியமான உணவுகள்
குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுகளை கொடுக்கும் போதும், அவர்களுக்கு அந்த உணவின் நன்மைகளையும் தீமைகளையும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் அதனை உணர்ந்து சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவர். உதாரணமாக, பழங்கள் மற்றும் சிப்ஸ் வைக்கும் போது, இரண்டைப்பற்றியும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் சிப்ஸை தவிர்த்து  பழங்களை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடு வார்கள். எப்போது உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போதும் அவர்களுக்கு ஆரோக்கியமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளது மனம் மற்றதை நாடாமல், ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடச் செய்யும். மிக முக்கியமாக வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து  குழந்தைகளுடன் சாப்பிட வேண்டும் ஏனென்றல் பெற்றோர்கள் பழக்கம் தான் பிள்ளைகளுக்கும் வரும் என்பார்கள் எனவே குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டால் அவர்களும் மறுக்காமல் சாப்பிடுவார்கள் மற்றும் அவர்களிடம் நெருங்கி பேசக்கூடிய சந்தர்பமாகவும் இருக்கும் மற்றும் நல்ல விசைங்கல்லை சொல்லி அவர்கள்ளை ஆரோக்கியமாக மட்டும் அல்லாமல் நல்ல குணத்துடன் வளரக்கூடிய வாய்ப்பாகவும் அமையும், எனவே பெற்றோர்களே இவற்றை முயற்சித்து இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறுங்கள்.

மான் A. ஷேக் [ கனடா ]

6 comments:

  1. நல்லதொரு தகவல் !

    வாசிக்கும் பெற்றோர்களுக்கு பயனுள்ள பதிவாக அமையும்

    ReplyDelete
  2. குழந்தை வளர்ப்பு பற்றிய அருமையான தகவல்.

    பதிந்தமைக்கு நன்றி.

    இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை.
    சுத்தம், சுகாதாரம், முறையான பராமரிப்பு, தரமான உணவு, தாயின் கவனம்&அரவணைப்பு, ஆகியவையே குழந்தை வளர்ப்பில் மிக கவனத்தில் கொள்ள வேண்டியவை.
    .

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    காலத்திற்கு ஏற்றதொரு ஆக்கம், பெற்றோர்கள் டிவி பார்க்கும் ஆசையில் அடிப்படை தேவைகள், குழந்தையைப்பற்றிய சிந்தனை எதுவுமே இல்லாமல் அப்படியே வாயை பிளந்து கொண்டு டிவி பார்ப்பதையே பிரதான வேலையாக இருந்து வருகிறார்கள்.

    இவர்களை என்ன செய்வது?

    தொட்டிக்கு நீர் ஏற்ற மோட்டாரை போட்டதோடு சரி, அது வழிந்து வெளியில் ஊற்றும் டோர்ர்ர்ரர்ர்ர்ர் என்று சப்தம் வந்தாலும் மோட்டாரை நிறுத்துவது இல்லை, கதவை தட்டி சொன்னதுக்கு ஆப்புறம் மோட்டார் நிறுத்தப்படும். இவ்வளதுக்கும் அந்த வீட்டில் வாப்பா உம்மா உள்பட நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் உண்டு என்றால் பார்த்துகோங்க.

    இது ஒரு தடவை அல்ல, ஒவோருதடவையும்.
    இதுகளெல்லாம் எப்படி உருப்படும்?

    இது மட்டுமா? இன்னும் நிறைய இருக்கு.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி
    குழந்தை வளர்ப்பை பற்றி அருமையானதொரு ஆக்கம்
    குழந்தைக்கு முதல் ஆசான் பெற்றோர்களே அதனால் பெற்றோரின் செயலும் நடத்தையும் பிள்ளைகளுக்கு படிப்பு
    காலத்திற்கு ஏற்ற நல்ல ஆக்கம்
    ------------------------
    இம்ரான்.M.யூஸுப்

    ReplyDelete
  5. Dear Brothers, Thanks for your respected comments & welcome

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.