.

Pages

Saturday, March 2, 2013

அதிரையரின் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் !

பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கார்காவயல் என்ற இடத்தில் உள்ளது மனோரா பாலிடெக்னிக் கல்லூரி. அதிரையர்கள் பங்குதாரர்களாக செயல்படும் இந்த கல்லூரியில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் எஸ்.எம்.முகமது முகைதீன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முதல்வர் எஸ்.சரவணன் வரவேற்றார். முகாமில் 13 நிறுவனங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாணவர்களை தேர்வு செய்தனர். மொத்தம் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன், தாளாளர் ஐ.நாடிமுத்து ஆகியோர் தொழில் நிறுவன மேலாளர்களையும், பணிநியமன ஆணை பெற்ற மாணவர்களையும் பாராட்டி பேசினர். முடிவில் கல்லூரி பணி நியமன அலுவலர் சி.அட்சயகுமார் நன்றி கூறினார்.

நன்றி : தினத்தந்தி

3 comments:

  1. செய்தி பகிந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.