இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே நோய்கள் வந்துவிடுகின்றன. அதற்கு போதிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் தான் காரணம். மேலும் இந்த மாதிரியான பழக்கவழக்கங்கள் வருவதற்கு மற்றொரு பெரும் காரணம், இந்த பழக்கவழக்கங்கள் சிறுவயதிலிருந்து பழகியது. எனவே அத்தகைய ஆரோக்கியமற்ற பழக்கத்தை குழந்தைகள் பின்பற்றாமல் இருப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது.ஏனெனில் இன்றைய நவீன உலகில் மார்டன் என்ற பெயரில் ஹோட்டல்களுக்கு சென்று ஜன்ங் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு அதன் சுவையானது நாவில் ஒட்டிக் கொண்டு, அதனையே அவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவர். பின் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தால் கூட, அதை விரும்பி சாப்பிடாமல், அடம்பிடித்து தவிர்த்து விடுவர். எனவே குழந்தைகள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான உணவுகளை கொடுத்து, அத்துடன் நல்ல பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியமாகிறது.
எந்த ஒரு உணவுகளை கொடுக்கும் போதும், அவர்களுக்கு அந்த உணவின் நன்மைகளையும் தீமைகளையும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் அதனை உணர்ந்து சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவர். உதாரணமாக, பழங்கள் மற்றும் சிப்ஸ் வைக்கும் போது, இரண்டைப் பற்றியும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் சிப்ஸை தவிர்த்து பழங்களை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள்.
மிக முக்கியமான விசியத்தை இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்ளகிறேன் நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. இவர் ‘இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.
இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது. விளைவு குழந்தைகளை நூடுல்ஸ் சாப்பிட வைக்க கோடி கோடியாய் கொட்டி விளம்பரம் செய்கின்றன ஆனால் எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல சத்துக்கள் அடங்கியதாக இல்லை. மாறாக குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் கெடுதல் ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது என்று அறியவருகிறது.
என்னவே மேலே படித்ததை மனதில் பதிந்து கொண்டு உங்களது குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
பரிந்துரை : மான் A. ஷேக் [ கனடா ]
நன்றி : தட்ஸ்தமிழ்
அவசியமான பதிவு !
ReplyDeleteஉணவுப் பொருட்களில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்
மிக்க நன்றி சகோ. மான் சேக் அவர்களுக்கு
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.
ReplyDeleteகுழந்தைகளுக்கு சத்தென நினைத்து கொடுக்கும் உணவில் கவனம் செலுத்துவது மிக அவசியம். காரணம் அனைத்து உணவிலுமே சுவையைவேண்டி அமிலத்தன்மை கலக்கப்படுகின்றன.
///சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான உணவுகளை கொடுத்து, அத்துடன் நல்ல பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியமாகிறது.///
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநூடுல்ஸ், നല്ല പതിവ് ആനാല് نالا باثيفو இந்தோனேஷியர்கள் அதிகம் விரும்பும் உணவு, எது எப்படி இருந்தாலும் கவனம் செலுத்துவது அவசியம், நமக்கு இருக்கவே இருக்கு பாரம்பரிய உணவு. உணவு விஷயத்தில் மிக மிக கவனம் தேவை.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.