அ) ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆரியர்களுடன்
சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக் கூடம் மற்றும்
கழிவறைகளை சுத்தம் செய்கின்றனர்.
ஆ) ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை
அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச்
செல்வர்.
இ) ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார
பொறியியலாளர்” என
அழைக்கப்படுகிறார். அவரது மாத சம்பளம் அமெரிக்க டாலரில் ஐயாயிரம் முதல் எட்டாயிரம்
வரை ஆகும்.
ஈ) ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை,
அத்துடன் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன, ஆனால்
ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.
உ) ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு
வரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக்
கொடுக்கப்படுகிறது.
ஊ) ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய வசதி
படைத்தவர்கள் என்றாலும் அவர்கள் ஒரு போதும் தங்களுக்கென்று பணியாட்களை அமர்த்திக்
கொள்வதில்லை, தங்கள் வீட்டின் வேலைகளையும் பிள்ளைகளையும் தாங்களே கவனித்துக்
கொள்வார்கள்.
௭) ஜப்பான் பள்ளிக் கூடங்களில் முதலாம்
ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை பரீட்சைகளே இல்லை, கல்வியின் நோக்கம் விஷயங்களை
அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும் மாணவர்கள் பக்குவப் படுத்தப்படுகின்றனர்.
ஏ) ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்த
விதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்கு தேவையானது அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள்,
உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.
ஐ) ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் இரயில்
வண்டிகள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் ஏழு வினாடிகள் மாத்திரமே.
ஒ) ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக் கூடத்தில்
சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள்.
2020-ல் பாரதம்
வல்லரசாக வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட, எல்லா அடிப்படை வசதிகளோடு, ஒற்றுமையாக,
நிம்மதியாக, சந்தோஷமாக, அயல் நாட்டிற்கு எடுத்துக்காட்டாக இல்லாவிட்டாலும், உள்நாட்டில்
எந்தவித கலவரம் இல்லாமல், மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தாலே போதுமானது.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A.ஜமால் முஹம்மது.
Consumer & Human
Rights.
S/o. K.Mohamed
Aliyar (Late)
பயனுள்ள தகவல் !
ReplyDelete// 2020-ல் பாரதம் வல்லரசாக வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட, எல்லா அடிப்படை வசதிகளோடு, ஒற்றுமையாக, நிம்மதியாக, சந்தோஷமாக, அயல் நாட்டிற்கு எடுத்துக்காட்டாக இல்லாவிட்டாலும், உள்நாட்டில் எந்தவித கலவரம் இல்லாமல், மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்தாலே போதுமானது.//
நச் வரிகள் !
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஉங்களின் அசையும் அப்படியா, ரொம்ப சந்தோசம்.
ReplyDeleteஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள்.
ஜப்பானைப்பற்றி இப்படி வரிசையிட்டு புகழுந்து எழுதுவது போல் நம் நாட்டை பற்றி எப்போது எழுதுவது..?
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteநிச்சயமாக நம் பாரதத்தையும் பாசத்தோடு எழுதணும் என்று ஆசைதான்.
நேரம் இருக்குது, தைரியம் இருக்குது, விஷயம் இருக்குது ஆனால் விஷமமான செய்திகள் வந்து என் காதுகளில் விழுவதினால், அப்படியே காலம் கடந்து செல்கின்றது, என்றாலும் சமயம் கிடைக்காமல் போய்விடாது.
இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அந்த பதிவு இதில் வரும்.
தெரியாதவருக்கும் தெரியக்கூடிய விசயம் பதிததுக்கு நன்றி.
ReplyDelete