.

Pages

Monday, March 11, 2013

அதிரையில் கூட்டுறவு சங்கத்தேர்தல் அறிவிப்பு !

16 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுறவு சங்கத்தேர்தல் நடைபெற உள்ளது.  கூட்டுறவு சங்க தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்  ஆனால் கடைசியாக 1997ம் ஆண்டு ஜூலையில் தேர்தல் நடந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் 22 ஆயிரத்து 192 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் மாதம் 5ம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 12ம் தேதியும், மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 27ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான முறை என்பது மூன்றடுக்கு முறையாக உள்ளது. ஆரம்ப கட்டத் தேர்தல் என்பது ஒவ்வொரு சங்கத்திலும் 11 பேர் கொண்ட உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெறுகிறது. அந்த 11 பேர்களில் இருந்து ஒரு தலைவரும், துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவர். அதில், தலைவராகத் தேர்வு பெறுவர், மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டுறவு சங்கங்களுக்கானத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி படைத்தவர்.

மாவட்ட அளவில் இருந்து தேர்வு பெறும் தலைவர்கள் மாநில அளவிலான தேர்தல்களில் வாக்களிப்பதற்கு தகுதியைப் பெறுவார்கள். மாநில அளவிலான கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அரசு சார்பில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

அதிரையில் வருகின்ற [ 05-04-2013 ] அன்று நடைபெற உள்ள தேர்தலுக்குரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் குறித்த விவரங்களை பெறவும், புகார்களை தெரிவிக்கவும், தேர்தல் ஆணைய அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு உள்ளது. 044 - 24351403 என்ற தொலைபேசி எண்ணில், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், அந்தந்த மாவட்ட அளவில், அந்தந்த மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படும். கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தேர்தல் குறித்த சந்தேங்கங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

3 comments:

  1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி, நமக்கு அறிந்தவர்கள் யாராவது போட்டியிடுவார்களா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.