.

Pages

Saturday, March 2, 2013

அதிரை கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்காக மார்க்கக் கல்வி பயிற்சி !

அதிரை கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்காக மார்க்க கல்வி பயிற்றுவிக்கும் வகுப்புகள் தினமும் [ வெள்ளிக்கிழமை தவிர ] காலை 6.30  மணி முதல்  8.00 மணி  வரை நடைபெற்று வருகின்றது. மார்க்க கல்வி பயின்ற ஆசிரியர்களால் குரான் ஓதும் பயிற்சிகள், ஹதீஸ்களின் விளக்கங்கள், சூராக்கள் மனனம், இஸ்லாமிய பொது அறிவு கேள்வி-வினாக்கள் போன்றவைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி வகுப்புகளில் சிறுவர், சிறுமிகள் நல்ல ஒழுக்கத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அனைவரையும் வியக்க வைக்கிறது. மாதம் ஒரு முறை சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களை வரவழைத்து குழந்தைகளின் நிலைகளை ஆசிரியர் குழுவினர் அவர்களுக்கு விளக்கி கூறுவது குறிப்பிடத்தக்கது.
இருபத்திஒன்பது மஸ்ஜித்களைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க நமதூரில் குறிப்பிட்ட சில மஸ்ஜித்களில் மட்டுமே சிறுவர், சிறுமிகளுக்கான “குரான் ஓதுதல் பயிற்சிகளின்” வகுப்புகள் நடைபெறுகின்றன. இது வருந்தத்தக்கதாகும்.

உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர், சிறுமிகள், மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமானதொன்றாகிறது. குரான் ஓதுதல் பயிற்சிகள் நடைபெறாத மற்ற மஸ்ஜித்களை கண்டறிந்து இது போன்ற பயிற்சி வகுப்புகளை துவங்குவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

படங்கள் உதவி : சேனா மூனா [ டிஜிடெக் ]

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    மார்க்க கல்வியை அனைத்து முஹல்லாக்களிலும் தொடங்கி அனைத்து நமதூர் சிறுவர் சிறுமிகளும் பயன் பெற்று அனைவர்களும் மார்க்கக் கல்வியை பயின்றிட அதற்க்கான ஏற்ப்பாட்டை செய்து கொடுக்க அந்தந்த முஹல்லாஹ் அமைப்புகள் முன் வர வேண்டும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    மார்க்க கல்வி மிகவும் அவசியமானது, பெரும்பாலான வீடுகளில் தந்தையர்கள் சம்பாத்தியத்தின் காரணமாக வெளியில் இருப்பதினால் பிள்ளைகள் தாயார்களை ஏமாற்றிவிடுகிறார்கள். தாயார்கள் மிகவும் அக்கறை எடுத்தால் பழைய நிலை திரும்பும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர், சிறுமிகள், மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமானதொன்றாகிறது. குரான் ஓதுதல் பயிற்சிகள் நடைபெறாத மற்ற மஸ்ஜித்களை கண்டறிந்து இது போன்ற பயிற்சி வகுப்புகளை துவங்குவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.