.

Pages

Sunday, March 10, 2013

மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃபிரண்ட் [ NWF ] நடத்திய பேரணி மற்றும் கருத்தரங்கம் !

தஞ்சை தெற்கு : பெண்களின் பாதுகாப்பு ! நாட்டின் பாதுகாப்பு என்ற முழக்கத்தை முன்வைத்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மார்ச் -8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் சார்பாக தெற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையில் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. பேரணி சரியாக மாலை 4.30 மணி அளவில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே துவங்கியது. பேரணி செந்தில்குமரன் மஹாலில் பேரணி முடிவடைந்தது.

பேரணிக்குப் பின் கருத்தரங்கம் தொடங்கியது. இக்கருத்தரங்கத்திற்கு மெஹர் நிஷா தலைமை தாங்கினார். ரோஜா பேகம் வரவேற்புரை ஆற்றினார். முர்ஷிதா பாத்திமா தொகுப்புரையாற்றினார். விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலிமா, K.T.P மருத்துவமனை டாக்டர் பிரியா ராஜேஷ் மற்றும் மதுக்கூர் JCI மண்டல பயிற்சியாளர், தலைவர் கனிமொழி குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக ஆயிஷா பர்வின் நன்றியுரை வழங்கினார். நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


6 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    வரவேற்க்கத்தக்கது, இதுமாதிரி மகளிர் பேரணிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது, ஒரு நாள் வரும், அந்த நாள் மகளிர் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பார்கள், நிச்சயம் இது நடக்கும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. புகைப்படங்களுடன் பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.

    பெண்கள் விழிப்புணர்வு அடைவதற்கு இத்தகைய பேரணிகள் அவசிய மானதே.!

    ReplyDelete
  3. புகைப்படங்களுடன் பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. வரவேற்க்க வேண்டியது இப்படியும் ஒரு மகளிர் பேரணிகளா என்று வியப்படையும் வகையில் உள்ளது. விழிப்புணர்வோடு இருப்பது நல்ல விசையம் தான் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. புகைப்படங்களுடன் பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  6. பெண்கள் விழிப்புணர்வு அடைவதற்கு இத்தகைய பேரணிகள் அவசியமே அதேபோல் நாகரிகம் என்கிறபெயரில் அநாகரிகமாக ஆடை அணிந்து கலாச்சார சீர்கேட்டில் திரியும் பெண்களை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் இந்தியா கடுமையாக எதிர்க்க வேண்டும்....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.