.

Pages

Wednesday, March 6, 2013

BSNL பிராட்பேண்ட் கட்டணம் உயர்வு !

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி தற்போதுள்ள பிராட்பேண்ட் மாத கட்டண திட்டங்கள் ரூ.499ல் இருந்து 525 ஆகவும், ரூ.625ல் இருந்து 650 ஆகவும், ரூ.750ல் இருந்து 800 ஆகவும், ரூ.850ல் இருந்து 900 ஆகவும், ரூ.900ல் இருந்து 950 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் ரூ.1000ல் இருந்து 1050 ஆகவும், ரூ.1350ல் இருந்து 1425 ஆகவும், ரூ.1700ல் இருந்து 1,800 ஆகவும், ரூ.2150ல் இருந்து 2250 ஆகவும், ரூ.3300ல் இருந்து 3500 ஆகவும், ரூ.6 ஆயிரத்தில் இருந்து 6,300 ஆகவும், ரூ.9 ஆயிரத்தில் இருந்து 9,450 ஆகவும், ரூ.15 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரத்து 750 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

இந்த பிளான்களில் ஆண்டு வாடகை, இரண்டு மற்றும் மூன்று ஆண்டு வாடகை கட்டணங்களும் அதற்கேற்ப மாற்றப்படுகிறது. தற்போது ஒன்று, இரண்டு, மூன்று ஆண்டு வாடகை கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஒன்று, இரண்டு, மூன்று ஆண்டு கட்டண காலத்திற்கு பின் மாற்றப்பட்ட கட்டண விகிதம் கணக்கிடப்படும். பிற கட்டண பிளான்களில் மாற்றம் ஏதும் இல்லை.

இந்த கட்டண மாற்றங்கள் 6.4.2013 தேதியிட்ட பில்லில் இருந்து வரும். ஏற்கெனவே தற்போதுள்ள பிராட்பேன்ட் கோம்போ, அன்லிமிடெட் பிளான்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்கள் ஜன.1ம் தேதி முதல் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்குள் [ தரைவழி, செல்போன், வில்போன் ] செய்யப்படும் கால்களுக்கு மட்டுமே அமலபடுத்தப்பட்டுள்ளது. 
பிற நெட்வொர்க்குகளுக்கு செய்யப்படும் கால்கள் வாடிக்கையாளர்களின் பிளான்களுக்கேற்ப கணக்கிடப்படும்.

BSNL வழங்கும் ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்கள் விவரம் :

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    எல்லாமே ஏறிப்போச்சு, இதுமட்டும்தான் பாக்கி என்று நினைத்தேன்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. ஆஹா எத்திடாய்ங்கலா என்னடா இவிங்க மட்டும் அமைதியா ஈக்கிறாங்கனு பார்த்தேன்

    நல்லது நாடு இப்படியே போன வெளங்கிடும்

    ReplyDelete
  3. எவ்வளவு விலை ஏற்றம் வந்தாலும் மக்களுக்கு அனைத்துமே அவசியத்தேவைகள் ஆகிவிட்டதால் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற நோக்கத்தில் தான் அனைத்து பொருளின் விலைவாசிகளும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அதில் இதுவும் ஒரு வகை என்று தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  4. எவ்வளவு விலை ஏற்றம் வந்தாலும் மக்களுக்கு அனைத்துமே அவசியத்தேவைகள் ஆகிவிட்டதால் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற நோக்கத்தில் தான் அனைத்து பொருளின் விலைவாசிகளும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அதில் இதுவும் ஒரு வகை என்று தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.