.

Pages

Monday, March 4, 2013

[ 6 ] டீக்கடை சந்திப்பு !


அஸ்ஸலாமு அலைக்கும் சலீம் என்ன செய்தி சவ்க்கியமா இருக்கீங்களா..? என்ன கால தாங்கி தாங்கி நடந்து வர்றீங்க..!

வ அலைக்கும் சலாம் சாதிக். நீங்க எப்புடி இருக்குறீங்க. நா வர்ற வழியிலே கல்லு குத்திப்புடிச்சி. இந்த பாழாப்போன ரோட்டத்தான் போடறேன் போடறேன்டு சொல்லி அப்புடியே போட்டு வச்சிட்டாங்களே..!

கோபப்படாதிங்க சலீம். கூடிய சீக்கிரம் போட்டுடுவாங்க. அது வரைலும் நீங்க கொஞ்ச பாத்து ரோட்டோரமா போங்க. அப்புறம் எங்க இன்னைக்கு கொஞ்சம் வேகமா போற மாதிரி தெரியிது.

மீனு வாங்க மார்கட்டுக்குக்கு தான் போயிட்டு இருக்கேன் சாதிக். மீனு கொஞ்சம் சல்லிசா கெடக்கிதாம். அதான் வெள்ளனமையே போய் வாங்கி கொடுக்கலாமுண்டு போறேன்.

ஆமா நானுந்தான் கேள்விப்பட்டேன் சலீம். மீனு இப்போ வரத்து அதிகமா இருப்பதாலே சல்லிசா இருக்குதாம். சவ்ரியமா கெடக்கும் போதே நல்ல படியாவாங்கி சாப்புட்டுக்கிட வேண்டியது தான்.ஆனா தேங்கா வெல தான் ஏறிப்போச்சி.தெரியுமா..?

அப்புடியா எவ்வளவு விக்கித்து சாதிக். பெரும்பாலும் நம்ம வூட்டுலே தேங்கா வெட்டுக்காறாரு மணி அண்ணன் தான் வந்து வெட்டு தேங்கா அஞ்சி பத்துண்டு கெடக்கிரத்த கொடுத்துட்டு காச வாங்கி கிட்டு போவாரு.அதுனால நா வெளியிலே தேங்கா ரேட்டலாம் விசாரிக்கிறது கெடையாது.

தேங்கா ஒன்னு இப்போ பத்து ரூபாயாம் சலீம். ஒரு பொருளுக்கு ரேட்டு எறங்குனா இன்னொரு சாமானுக்கு ரேட்டு ஏறிக்கிட்டு போவுது.என்னா செய்றது. கணக்கு பாத்தா நமக்கு செலவு மாசம் ஒரே மாதிரியாத்தான் வருது.

சாதிக்ட்ட ஒன்னு கேக்கலாம்ண்டு நெனச்சேன்.அதான் இந்த ரயிலு ரோட்ட ரொம்ப துரிதமாபேத்து வேலையெல்லாம் மும்முரமா நடந்துச்சே. அப்பறம் என்னாச்சி அப்புடியே போட்டுடாங்களே. மறுபுடி புது ரோடு எப்ப போடப்போறாங்களாம். நீங்க எதுவும் கேள்வி பட்டீங்களா..?

அந்த செய்திய உடுங்க சலீம். அது இப்போ நடக்குற மாதிரி தெரியலே. நம்ம காலத்துலே தான் ரயிலையே நம்பிக்கிட்டு இருந்தோம். அதான் மதுராசுக்கு போக மாடல் மாடலா நம்ம ஊர்லேந்து பஸ்சு விட்டுருக்காங்களே அப்பறம் என்ன..?

அப்பறம் சாதிக் மல்லிபடத்துலே கூறக்கத்தாலே மீனு கூகூண்டு மாட்டுனிச்சாமுல நல்ல வெலையில போயிருக்கு தெரியுமா உங்களுக்கு..?

ஆமா நானும் தான் கேள்விப்பட்டேன் சலீம்.மொத்தம் 202 மீனு மாட்டுனிச்சாம். ஒவ்வொரு மீனும் 30 கிலோ வரை எட இருந்திருக்கு. மொத்தம் 60 லெட்சத்துக்கு வெல போயிருக்கு.இது எப்பவாச்சும் கொஞ்சம் ஆழ்கடல் பக்கம் கூட்டம் கூட்டமா வருமாம். பேசிக்கிர்றாங்க.உசுர கைல புடிச்சிக்கிட்டு கடல நம்பி பொழப்பு நடத்துறவங்களுக்கு ஆண்ணடவனா பாத்துக்கொடுத்த  அதிர்ஷ்டமுண்டு தான் சொல்லணும்

சரி சாதிக் நா மொதல்ல போய் மீனா வாங்கி கொடுத்துட்டு வந்துடறேன். இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம். இப்பவே போனாத்தான் கொஞ்சம் நல்ல மீனா வாங்கலாம்.

அதிரை மெய்சா

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தற்போது பெயர்த்து எடுக்கப் படுகின்ற இரயில் பழைய தண்டவாளங்கள், புதியதாக அகல இரயில் புதிய தண்டவாளங்கள் போடுவதற்க்கா அல்லது நிரந்தரமா போடாமல் அப்படியே விட்டு விடுவதற்க்கா?

    மிகவும் ஜாக்கிரதை.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. ஊரின் நிலைப்பாடு விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.