.

Pages

Friday, March 22, 2013

உங்கள் பகுதியில் விபத்து நடக்கிறதா ? ஆன்லைனில் தகவல் தெரிவிக்கலாம் !

பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன என்ற நிலையில் தேவை யான எச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ள ஏதுவாக தங்கள் பகுதி விபத்து பகுதி என்ற விவரத்தை மத்திய தரை வழி போக்குவரத்து ஆணையரகத்துக்கு www.morth.nic.in என்ற முகவரியில் ஆன்லைன் முறையில் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிக்க விரும்புவோர் தங்கள் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண், போன்ற விவரங்களை பதிவு செய்த பின்னர்...

1. உங்கள் ஊரின் சாலை பாதுகாப்பானதாக உணர்கிறீர்களா ? 
2. இல்லை எனில் வாகனங்கள் வேகமாக செல்கின்றனவா ?
3. விதி மீறி செல்கின்றனவா ?
4. சாலையின் கோணம், நீள, அகலம் சரியில்லையா !
5. விபத்து நடக்கும் பகுதி நகரமா, கிராமமா ?
6. விபத்து நடக்கும் சாலை தேசிய நெடுஞ்சாலையா, மாநில நெடுஞ்சாலையா ?
7. விபத்துகளை தவிர்க்க உங்கள் யோசனை என்ன ?

போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என தரைவழி போக்குவரத்து ஆணையரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    பயனுள்ள தகவல். மக்கள் பயன் பெறட்டும். அதே நேரத்தில் விபத்துக்கள் நடக்காமல் இருக்கட்டும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. அவசியம் எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.