.

Pages

Saturday, March 2, 2013

இமாம் ஷாஃபி பள்ளியில் லயன்ஸ் சங்கம் நடத்திய வினாடி - வினாப் போட்டி!

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பாக மாணவ மாணவியரின் பொது அறிவுத் திறனை வளர்க்கும் விதமாக நடத்தப்பட்ட பொதுஅறிவு வினாடி -வினா போட்டி இன்று [ 02-03-2013 ] மாலை 4.00 மணியளவில் நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் சங்கத் தலைவர் S. அப்துல் ஹமீத் அவர்கள் தலைமையிலும், பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர், முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முகைதீன் ஆகியோர் முன்னிலையிலும்  நடைபெற்றது.
போட்டியில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி ஆகியவற்றை சார்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .
போட்டியை காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர் கா. செய்யது அகமது கபீர் அவர்கள் நடத்தினார்.

இவ்விழாவில் ஹபீபா ஹைப்பர் மாலின் உரிமையாளர் ஹுமாயுன் அவர்கள் போட்டிக்குரிய பரிசுத்தொகையை மாணவ மாணவியருக்கு வழங்கினார்.

மேலும் ஐந்து பள்ளிகளின் சார்பாக அதன் ஆசிரிய ஆசிரியைகள் வருகை தந்து போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தினர்.

வெற்றிபெற்றோர் விவரம் :
முதல் பரிசு : ரூபாய் 1500/- [ காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ]
இரண்டாம் பரிசு :ருபாய் 1200/- [ ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி ]
மூன்றாம் பரிசு : ரூபாய் 900/- [ காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ]





இப்போட்டியில் முதல் பரிசை தட்டிச்சென்ற காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் விரைவில் நடைபெற இருக்கின்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை லயன்ஸ் சங்கத் தலைவர் அப்துல் ஹமீத், செயலாளர் சாகுல் ஹமீத், பொருளாளர் தமீம் அன்சாரி ஆகியயோர் செய்து இருந்தனர். இவ்விழாவில் லயன்ஸ் நிர்வாகிகள் அஹமது, பார்த்தசாரதி, லியோ நிர்வாகிகள் நியாஸ் அகமது, காதிர் முகைதீன் மற்றும் காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

6 comments:

  1. வெற்றி பெற்ற அனைத்து மாணாக்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற மாணவ மாணவியர், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பள்ளிகளுக்கு வாழ்த்துகள்...

    தொடர்ந்து இதுபோன்ற அறிவுத்திறன் போட்டிகள் நடத்த மீண்டும் என் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. கல்வி பயின்று கொடுக்கும் ஆசான்கள்.

    பிள்ளைகளை இத்தகைய அறிவுத்திறன் போட்டிகளை வைத்து ஆராய்ந்தால் கல்வி அறிவில் பலகீனமுல்லா மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்றுக்கொடுத்தால் அப்பள்ளியின் தரம் கூடுவதுடன் அம்மாணவனுக்கு தக்க கல்வி அறிவும் கிடைக்க வாய்ப்பாகிவிடும்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வெற்றி பெற்ற அனைத்து மாணாக்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    பிள்ளைகளை இத்தகைய அறிவுத்திறன் போட்டிகளை வைத்து ஆராய்ந்தால் கல்வி அறிவில் பலகீனமுல்லா மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்றுக்கொடுத்தால் அப்பள்ளியின் தரம் கூடுவதுடன் அம்மாணவனுக்கு தக்க கல்வி அறிவும் கிடைக்க வாய்ப்பாகிவிடும்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற அனைத்து மாணாக்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.