.

Pages

Sunday, March 24, 2013

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்வதை கண்காணிக்க வேண்டும் : உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கலெக்டர் அறிவுரை !

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நீரினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துதல் தொடர்பான மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசியதாவது :–

நீரினால் பரவும் பல்வேறு நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுவதை கண்காணிக்க வேண்டும். கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை அழிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

முதல்–அமைச்சரின் விஷன்–2023 தொலைநோக்கு திட்டத்தின்படி 2015–ம் ஆண்டுக்குள் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் மாற்றிடும் நிலையை உருவாக்கிடும் வகையில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரம் மற்றும் தனிநபர் கழிவறைகள் கட்டுவதற்கான புள்ளி விவர சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அம்மா திட்டத்தின் கீழ் அனைத்து வருவாய் கிராமங்களிலும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வருவாய்த்துறை அலுவலர்கள் 6 மாத கால அளவிற்குள் நேரில் சென்று மக்கள் குறைகளை தீர்க்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.

இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்கப்பட உள்ளன. அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நீரினால் பரவும் நோய்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் கொசுக்கள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் அவற்றை அளிப்பதற்கான வழிமுறைகள், பொதுசுகாதாரம் குறித்த விளக்கப்படம் மக்கள் பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாராணிரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வரதராஜன், நகர சபை தலைவர்கள் சாவித்திரிகோபால், ரத்னாசேகர், ஜவகர்பாபு, மாவட்ட மலேரியா அலுவலர் போத்திபிள்ளை மற்றும் அனைத்து பேரூராட்சி தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் - தஞ்சை

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    அறிந்து கொள்ளவேண்டிய தகவல்.

    ReplyDelete
  2. நல்ல திட்டம். தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.