1. கிராஅத் : அஹமது கபீர் அவர்கள்
2. வரவேற்புரை : MMS. சேக் நசுருதீன் அவர்கள்
3. கடந்த [ 22-01-2013 ] அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சிறப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து பேராசிரியர் M.A. முஹம்மது அப்துல் காதர் அவர்களால் விளக்கப்பட்டது.
4. AAMF'ன் சார்பாக அதிரையில் இலவச மருத்துவ முகாம் நடத்துவது என்று ஆலோசிக்கபட்டன. மற்ற அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மருத்துவ முகாம்ங்கள் நமதூரில் நடந்து வருவதாக ஒரு சில உறுப்பினர்களிடேயே மாற்றுக்கருத்து ஏற்பட்டதால் அதற்கு மாறாக மாணவர்கள் பயனுறும் வகையில் வருகின்ற கோடைகால விடுமுறை தினங்களில் அதிரையில் கல்வி விழிப்புணர்வு முகாம் நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டன.
5. AAMF'ன் அமீரக கிளை மற்றும் தரகர் தெரு அமீர நிர்வாகிகளின் சார்பாக அனுப்பட்ட கடிதங்கள் இந்தக்கூட்டத்தில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து புதிதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தரகர்தெருவின் புதிய நிர்வாகிகளிடமிருந்து கருத்து பெறப்பட்டுள்ளது.
6. கடந்த ஆண்டு சகோ. M. சேக்தாவுது [ நெசவுத்தெரு ] அவர்களின் சார்பாக சித்திக் பள்ளி – பாதை அடைப்பு தொடர்பாக AAMF'க்கு கொடுக்கப்பட்ட மனுவின் முடிவு குறித்து விளக்கம் கோரியதையடுத்து, அவற்றை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு ஆலோசிக்கபட்டன. இறுதியில் வருகின்ற [ 31-03-2013 ] அன்று ஞாயிறு காலை 10 மணியளவில் நமதூர் பெரிய ஜூம்ஆ பள்ளியில் சித்திக்பள்ளியின் தலைமை நிர்வாகிகளை அழைத்து அவர்களின் கருத்தை பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பாக அழைப்பிதழ் அவர்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
7. துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றன.
தகவல் தொடர்பாளர்
குறிப்பு : அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாதமும் ஒன்பது மஹல்லாவிலும் தலா ஒரு கூட்டம் நடத்துவது எனவும், அதன்படி அடுத்தக் கூட்டமாக "கடற்கரைத்தெரு மஹல்லாவில்" நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ] இதற்கிடையில் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட்டப்படுகிற கூட்டங்களும் நடைபெறும்.
பதிப்புக்கு நன்றி
ReplyDeleteAAMF - ன் ஆக்கபூர்வமான பணிதொடரவும் சமூக சிந்தனைவுடன் இதன் மூலம் பங்களிப்பு ஆற்றிக்கொண்டுயிருக்கும் AAMF நிர்வாகிகளுக்கும் நன்றி.பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவது மட்டுமன்றி ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்து செல்லவேண்டும்.மார்க்க ரீதியிலான விழிப்புணர்வு,கல்வி விழிப்புணர்வு, சுகாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை,பெண்களுக்கு ஒழுக்கவிலான பயிற்சி ,மக்தப் பாடசாலையின் தேவை, மாணவர்கள்,வாலிபர்களுக்கு சுயப்பயிற்சி,வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு போன்ற விசயங்களை முன்னெடுத்து சென்றால் வலிமையான சமூதமாக நமதூர் சமுதாயம் இன்ஷா அல்லாஹ் உருவாகும் என்பது என் கருத்து.மற்றபடி ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் இதன் நிர்வாகிகளுக்கு நன்றிகள்
-------------------
இம்ரான்.M.யூஸுப்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலுக்கும் நன்றி.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteதொய்வில்லாமல் நடந்து வரும் மாதாந்திரக் கூட்டங்கள் பற்றிய தகவலுக்கு நன்றி.
நமதூரில் மண்டிக் கிடக்கும் காட்டுக் கருவை பற்றிய ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை என்னால் எழுதப் பட்டு வலைத்தளங்களில் வெளியாயின. நமது ஊரின் நிலத்தடி நீர்வளத்துக்கும் சுற்றுப் புற சுகாதாரத்துக்கும் பெரும் சவாலாக இருக்கக் கூடிய காட்டுக் கருவிகளை பேரூராட்சி மன்றத்தின் உதவியுடன் தன்னார்வ அமைப்புகள் ஒன்று திரண்டு ஊரைவிட்டு அகற்றும் பணியை அடுத்து வரும் கூட்டங்களில் விவாதித்து ஒன்று திரண்டு காட்டுக் கருவை செடிகளை அழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
பிளாஸ்டிக் உபயோகம் ஒரு கட்டுபாட்டுக்கு வந்தது போல் அபாயகரமான இந்தச் செடியும் அழிக்கப் பட வேண்டுமென்று ஒரு விழிப்ப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் . பள்ளி கல்லூரி மாணவர்களை இதற்காக பயன்படுத்தலாமென்று துபாயிலிருந்து அஹமது அமீன் என்கிற இளைஞர் கருத்துத் தெரிவித்து இருந்தார். இதை இந்த அமைப்பு முன்னுரிமை கொடுத்துப் பரிசீலிக்க வேண்டும்.