பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.
நமதூர் நடுத்தெருவில் கடந்த [ 09-05-1939 ] அன்று ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சென்ற [ 03-10-2003 ] அன்று நடுநிலைப்பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்று, தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி பணியை சிறப்பாக வழங்கி வருகின்றது. 1 முதல் 8 ம் வகுப்புகள் வரை கொண்டுள்ள இந்த பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி அதிரை நகரில் உள்ள மெட்ரிக்பள்ளிகளுக்கு இணையாக கல்வியின் தரத்தில் உயர்ந்து வருகின்றன. இதற்காக ஆரம்ப கல்வியை பரவலாக்கும் நோக்கத்தோடு 'எல்லோருக்கும் கல்வி' என அரசால் கொண்டு வரப்பட்ட சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் 2012-2013 கல்வி ஆண்டில் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகள் மூலம் 1 முதல் 5 ம் வகுப்பு மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக நேரடி காட்சிகள் மூலம் பாடங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் கற்றலில் இனிமை, எளிமை, புதுமையால் மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்று கற்கின்றனர். அவர்களுக்கு மனப்பாடமில்லாமல் மனதில் எளிதில் பதிந்துகொள்ள உதவுகின்றன.
அதே போல் மற்றொரு மகிழ்ச்சிகுரிய செய்தி வருகின்ற 2013-2014 கல்வியாண்டு முதல் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழிக்கல்வி இந்த பள்ளியில் செயல்பட உள்ளது. பள்ளியின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வருகின்ற கிராம கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆகியோரைச்சாரும்.
இத்துணை நிறை இருந்தும் சில குறைகளும் அங்கே காணப்படுகின்றன.
1. குறிப்பாக வயது வந்த பெண் பிள்ளைகள் பயன்படுத்தும் கழிவறைகள் பிரத்தியோகமாக பயன்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை. இவற்றை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.
2. புதிதாக கட்டியுள்ள வகுப்பறைகளில் சத்தம் அதிகமாக வருவதை குறைக்கும் விதமாக ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி பாடம் நடத்துவதற்கு தேவையான ஒலிப்பெருக்கி சாதனங்களை வாங்குவதற்கு இப்பள்ளிக்கு உதவ வேண்டும்.
3. அதே போல் போதுமான விளையாட்டு உபகரணங்களும் இப்பள்ளியில் இல்லை.
இவற்றை நிவர்த்தி செய்வது இப்பள்ளியில் கல்வி கற்று பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் உதவ முன்வந்தால் நிச்சயம் சிறந்த பள்ளி என்ற பெயரை பெறுவதோடு மட்டுமல்லாமல் நமக்கு கல்வி கற்றுத்தந்த நமது பள்ளிக்கு நாம் செய்யும் சிறிய கடமை என்ற மகிழ்ச்சி நம்மிடம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !
அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடிநீர், உணவுக்கூடங்கள் மற்றும் வகுப்பறைகளின் தரம், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நமது பள்ளிகளை நாமே தரத்திலும் சேவையிலும் உயர உதவுவோம்.
Naan padeththa palle.eppothu parkkum pothu ullam pureppu adaikenrathu.
ReplyDeleteஎனது தகப்பனார் இப்பள்ளியில் தொடக்க கல்வியை பயின்றதால் எனக்கு இப்பள்ளி மீது தனி கவனம் உண்டு.
ReplyDeleteசேவையில் சிறந்த விளங்க வாழ்த்துகள்...
Naangal payindra palli... marakka mudiyatha thuvakka pallli... malarum ninavuhal
ReplyDeleteAssalamu alaikkum. Entha pallekku olepearukke vaagke thara anaivarum munvara veandum. Entha pallekku mealum oru kalevarai katdekoduththal palle el paelum manava manave kalukku vasatheyaka erukkum
ReplyDeleteபாராட்டுக்கள் இப்பள்ளிக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteமாஷா அல்லாஹ், இன்னும் பசுமையா 5 வருடங்கள் அப்படியே இருக்கின்றன. நிச்சயம் மேலும் உயர்வுகான பழைய மாணவர்களும் மற்றவர்களும் முயல்வோம். எங்கே எப்படி உதவி செய்வது என்பதை abdmalick@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்தவும்.
ReplyDelete