.

Pages

Tuesday, November 12, 2013

INTJ யின் அதிரை நகரத்தலைவர் பொறுப்பிலிருந்து விலகல் ! த.மு.மு.க வில் இணைந்தார் !

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை நகர கிளை தலைவராக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் கமாலுத்தீன் ஆவார். இவர் அதிரை கடைத்தெருவின் பிராதான பகுதியில் ஜாஹீர் என்ற பெயரில் உணவகத்தை நடத்தி வருகின்றார். சமீபத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இவருடைய கடை முற்றிலும் எரிந்து நாசமாகியது. இது தொடர்பான வழக்குகள் நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் வகித்து வந்த பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக்கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சமீபத்தில் அதிரையில் நடந்த த.மு.மு.க / ம.ம.க கட்சியின் நிர்வாகத் தேர்தலில் இவருக்கு த.மு.மு.க சார்பாக அதிரை நகர இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. இது எல்லாம் ஒரு செய்தி?

    ReplyDelete
  2. ஊருக்கும் ஊர்மக்களுக்கு இது ரொம்ப முக்கியமான செய்தி ?

    ReplyDelete
  3. தன்னுடைய சுய நலத்தை இவருடைய செயல் காட்டுகிறது தனக்கு ஏற்ப்பட்ட பிரச்சினையே தான் சார்ந்த அமைப்பு கண்டுக்கொள்ளவில்லை என்பதற்க்காக. அடுத்த அமைப்புக்கு தாவியுள்ளார் நல்லா வருவாய். எங்கள் தலைவர் பாக்கர் சுயநல வாதிகளுக்கு துனைப்போக மாட்டார் என்பதை அறிவோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.