தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் பகுதி வாக்காளர்கள் செலுத்தும் வாக்குகளின் அடிப்படையில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில், இந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள்-கல்வியாளர்கள்-ஜமாஅத் பிரமுகர்கள்-கிராம பஞ்சயாத்தார்கள் ஆகியோரிடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் செலுத்த இருக்கும் உங்களின் வாக்கு யாருக்கு ? என்ற கேள்வியை முன்வைத்து ஆய்வு நடத்தியதில் 21 கோரிக்கைகளை முன்வைத்தனர். இவற்றை எந்த வேட்பாளர் நிறைவேற்றி தர உறுதி அளிக்கின்றாறோ அவருக்கே எங்கள் பகுதி மக்களின் வாக்கு என தெரிவித்து இருந்தனர்.
அதிரையை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் இப்ராஹீம் அலி. எம்.பி.ஏ பட்டதாரி. அவசர காலங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைத் தேடிச்சென்று இரத்த தானம் தொடர்ந்து வழங்கி வருபவர். இந்தநிலையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் முஹம்மது இல்யாஸ் அவர்களை சந்தித்து, அதிரை ஆர்வலர்கள் வைத்துள்ள பொதுநல கோரிக்கைகள் - எதிர்பார்ப்புகள் குறித்த பட்டியலை வழங்கினார். கோரிக்கை பட்டியலை பெற்றுக்கொண்ட வேட்பாளர் முஹம்மது இல்யாஸ், தேர்தலில் வெற்றி பெற்று தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பொதுமக்கள் கோரிக்கைகள் மீது முழு கவனம் செலுத்துவதாகவும், இந்திய சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். அப்போது எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், முஹம்மது ஹனீபா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.