அதிராம்பட்டினம் ஏப்-25
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையைப் பகுதியில் தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று இரவு நடைபெற்றது.
அதிராம்பட்டினம் தமாகா தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம் தலைமை வகித்தார். தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் என்.ஆர். ரெங்கராஜன் எம்.எல்.ஏ தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து பேசும்போது, 'தேமுதிக் வேட்பாளர் என். செந்தில்குமார் கடினமாக உழைத்து முன்னேறியவர். நாம் அனைவரும் கடினமாக உழைத்து இவரை வெற்றிப் பெறச் செய்வோம்' என்றார்.
தேமுதிக பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் என். செந்தில் குமார் பேசும் போது, இரண்டு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த எனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை எனக்கு வாய்ப்பளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், அக்பர் சுல்தான் ( தேமுதிக ), காளிதாஸ் (இந்திய கம்யூ), வடுகநாதன் ( மதிமுக ), புருசோத்தமன் ( விடுதலை சிறுத்தைகள் ) உள்ளிட்ட பலர் வேட்பாளரை ஆதரித்து பேசினார்கள்.
முன்னதாக எம்.எம்.எஸ் அப்துல் கரீம் வரவேற்றார். தமாகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் D. ராஜா, எம்எம்எஸ் ரபி அஹமது, எம்எம்எஸ் ஜலீல், எம்எம்எஸ் அன்வர், எம்எம்எஸ் புஹாரி, எம்எம்எஸ் சகாபுதீன், எம்எம்எஸ் ஜாஃபர், எம்எம்எஸ் ரியாஸ், சகாதேவன் மற்றும் தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.