திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரன் இன்று காலை முதன் முறையாக அதிரை வருகை தந்தார். அப்போது அதிரை பேரூராட்சி பெருந்தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களின் இல்லம் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு கோரினார். சந்திப்பின் போது திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், திமுக வார்டு பொறுப்பாளர்கள் நிஜாமுதீன், பசூல்கான், பிரின்ஸ் ராவுத்தர், சைஃபுதீன், ஊர் பிரமுகர்கள் உதுமான் ஹாப்சா, மாணிக்க முத்துசாமி, மான் நெய்னா முஹம்மது, மான் சேக், முகைதீன், ஜம் ஜம் அஸ்ரப், இஷாக், மல்ஹர்தீன், இப்ராஹீம், அஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் அங்கிருந்து காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் ஜலீலா முஹம்மது முகைதீன் அவர்களின் இல்லம் சென்று சந்தித்து பேசினார். அப்போது அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மற்றும் ஏராளமான திமுக - காங்கிரஸ் கட்சியினர் உடனிருந்தனர்.
பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாழ்க்கைக் குறிப்பு:
பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே. மகேந்திரன், வயது 39, பி.ஏ. பட்டதாரி. இவரது தந்தை பெயர் கல்யாணசுந்தரம். தாயார் பெயர் கமலா. இவரது சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை கிராமம். இவருக்கு தங்கை ஒருவர் உள்ளார்.
மகேந்திரன் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பில் தென்சென்னை மாவட்டத் தலைவராகவும், மாநில துணைத் தலைவராகவும், இந்திய தேசிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் மாநிலப் பொதுச்செயலராகவும், அகில இந்திய செயலராகவும், அகில இந்திய பொதுச்செயலராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலராக உள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையின் கீழ் அஸ்ஸாம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பேராவூரணி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.